மோடி அரசு அடித்த கொள்ளை 20 லட்சம் கோடி..பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வுக்கு ஜோதிமணி எம்பி கொதிப்பு
மோடிஅரசு எவ்வளவு இரக்கமற்றது என்பதற்கு இந்த விலையேற்றம் சாட்சி. பெட்ரோல்,டீசல்,சமையல் எரிவாயு விலையேற்றத்தில் அடித்த கொள்ளை மட்டும் 20 லட்சம் கோடிகள் என்று ஜோதிமணி எம்பி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: கொரொனா தொற்றால் மக்கள் உயிருக்கும்,அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்கும் போராடிக் கொண்டிருக்கும் போது ஒரு அரசு இப்படியா நடந்துகொள்ளும் என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார். மோடிஅரசு எவ்வளவு இரக்கமற்றது என்பதற்கு இந்த விலையேற்றம் சாட்சி. பெட்ரோல்,டீசல்,சமையல் எரிவாயு விலையேற்றத்தில் அடித்த கொள்ளை மட்டும் 20 லட்சம் கோடிகள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. பல மாநிலங்களில் 100 ரூபாய்க்கு மேல் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனையாகிறது. டீசல் விலையும் 100 ரூபாயைத் தொடப்போகிறது. இந்த விலை உயர்வு சாமானிய மக்களை கவலையடையச் செய்துள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசலை உயர்த்திய நிலையில் தற்போது வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் சமையல் கேஸ் சிலிண்டர் விலையும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது ஒரு சிலிண்டர் 850 ரூபாய் ஆக விற்பனையாகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து எதிர்கட்சியினர் போராடப்போவதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா காலத்தில் 20 லட்சம் கோடி ரூபாயை மோடி அரசு கொள்ளையடித்துள்ளதாக ஜோதிமணி எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரொனா தொற்றால் மக்கள் உயிருக்கும்,அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்கும் போராடிக் கொண்டிருக்கும் போது ஒரு அரசு இப்படியா நடந்துகொள்ளும் என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஜோதிமணி எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.
மோடிஅரசு எவ்வளவு இரக்கமற்றது என்பதற்கு இந்த விலையேற்றம் சாட்சி. பெட்ரோல்,டீசல்,சமையல் எரிவாயு விலையேற்றத்தில் அடித்த கொள்ளை மட்டும் 20 லட்சம் கோடிகள் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
-
போர் நிறுத்தத்திற்கு டிரம்ப் கிரீன் சிக்னல்! கச்சா எண்ணெய் விலை சரிவு.. இந்தியாவில் எதிரொலிக்குமா? -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications