சென்னையில் சதமடிக்கப்போகும் பெட்ரோல் விலை - இன்று எவ்வளவு தெரியுமா
பெட்ரோல், டீசல் விலை இன்று எவ்வித மாற்றமும் இன்றி விற்பனையாகிறது. சென்னையில் விரையில் சதமடிக்கப் போகிறது பெட்ரோல் விலை. ஒரு லிட்டர் ரூபாய் 98.88 டீசல் விலையும் ஒரு லிட்டர் 92.89 ரூபாயை தாண்டியுள்ளது.
சென்னை: கொரோனா லாக்டவுன் காலத்தில் பெட்ரோல் டீசல் விலை தினசரியும் உயர்த்தப்பட்ட நிலையில் இன்றைய தினம் மாற்றமின்றி விற்பனையாகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 100 ரூபாயை தொட்டுள்ளது. டீசல் விலையும் ஒரு லிட்டர் 92 ரூபாயை தாண்டியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
5 மாநில தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் டீசல் விலை மே மாதத்தின் தொடக்கத்தில் இருந்து தினசரியும் உயர்த்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா லாக்டவுன் காலத்திலும் தினசரியும் விலை அதிகரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த மே மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை 16 முறைக்கு மேல் உயர்த்தப்பட்டது. ஜூன் மாதத்திலும் அடுத்தடுத்து உயர்த்தப்பட்டு வருகிறது. இதுவரை 15 முறைக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல் விலை இன்று வரை ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது.
நேற்றைய தினம் சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 98 ரூபாய் 88 பைசாவாக விற்பனையானது. ஒரு லிட்டர் டீசல் 92 ரூபாய் 89 பைசாவாக விற்பனை செய்யப்பட்டது. இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.
விழுப்புரத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் 8 பைசாவாக விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் டீசல் 94.20 ரூபாய்க்கும் விற்பனையானது. பவர் பெட்ரோல் ரூ.102.67க்கு விற்றது.
விழுப்புரத்தில் முதன் முறையாக 100 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தைத் தவிர்க்க பெட்ரோல், டீசல் விலை குறைய வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications