சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

யு டர்ன்.. இத்தனை நாள் சைலன்ட்டா இருந்தாரே! ஆர்என் ரவியை இன்று சந்திக்கும் முக்கிய புள்ளி! கேம் ஓவர்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டின் முக்கியமான அரசியல் புள்ளி ஒருவர் பாஜகவுடன் நெருக்கம் ஆகி வருவதாக அரசியல் வட்டாரத்தில் தகவல் ஒன்று சுற்றி வருகிறது. இந்த நிலையில்தான் அந்த முக்கியமான புள்ளி திடீரென ஆளுநர் ஆர். என் ரவியை சந்திக்க இன்று ஆளுநர் மாளிகை செல்கிறார்.

தமிழ் மாநில காங்கிரஸ் எம்பி ஜி.கே.வாசன்.. இவர் பாஜகவுடன் நெருக்கம் காட்டி வருவதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வந்தன. கடந்த ஏப்ரல் மாதம் கூட இவர் டெல்லி சென்று இருந்தார். முக்கியமான பல விஷயங்களை பேசுவதற்காக இவர் டெல்லி சென்றதாக கூறப்பட்டது.

டெல்லியில் திடீரென பிரதமர் மோடியை சந்தித்தவர் நீண்ட நேரம் அவரிடம் ஆலசோனை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் தமிழ் மாநில காங்கிரஸ் எம்பி ஜி.கே.வாசன், தனக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

வான்டடாக போய் வண்டியில் ஏறிய வாசன்.. பாய்ந்தது வழக்குகள்.. எடப்பாடிக்கு ஆதரவாக தர்ணா நடத்தி சிக்கல்வான்டடாக போய் வண்டியில் ஏறிய வாசன்.. பாய்ந்தது வழக்குகள்.. எடப்பாடிக்கு ஆதரவாக தர்ணா நடத்தி சிக்கல்

என்ன கோரிக்கை?

என்ன கோரிக்கை?

பாஜகவுடன் ராசியாக இருக்கும் இவர் அமைச்சர் பதவியை கேட்டதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடிக்கு பர்சனலாக இவரை மிகவும் பிடிக்கும். தமிழ்நாடு அரசியல் தலைவர்களில் பிரதமர் மோடியின் குட் புக்கில் இருப்பவர்களில் இவரும் ஒருவர். இந்த நிலையில் மோடியும் இவருக்கு அமைச்சர் பதவி வழங்கலாமே என்ற திட்டத்தில் இருந்திருக்கிறாராம். அதாவது தனி பொறுப்பு உள்ள இணை அமைச்சர் பதவி ஒன்றை வாசனுக்கு வழங்க பாஜக தலைமையும், பிரதமர் மோடியும் விரும்பியதாக கூறப்பட்டது. ஆனால் இதற்கு பிரதமர் தரப்பு வைத்த கண்டிஷன், த.மா.காவை பாஜகவுடன் இணைக்க வேண்டும் என்பதுதான் என்று கூறப்படுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பாஜகவுடன் இணையுங்கள்.

தமிழ் மாநில காங்கிரஸ்

தமிழ் மாநில காங்கிரஸ்

தமிழ்நாட்டில் சேர்ந்து செயல்படுங்கள்..அமைச்சர் பதவி தருகிறோம் என்று கூறியதாக தகவல்கள் வந்தன. ஆனால் இந்த செய்திகள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை. இதையடுத்து ஜி.கே வாசன் அப்படியே அமைதியானார். பெரிதாக டெல்லி பக்கம் தலைகாட்டவில்லை. பாஜக தலைவர்களை சந்திக்கவில்லை. தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி கடைசியாக வந்த போதும் கூட ஜி.கே வாசன் சென்று அவரை சந்திக்கவில்லை. அதேபோல் ஜி.கே வாசன் அமித் சாவையும் பெரிதாக சந்திக்கவில்லை. பாஜகவுடன் நெருக்கம் ஒதுங்கியே இருந்தார். இத்தனை நாள் அமைதியாக இருந்த ஜி.கே வாசன் இன்று யு டர்ன் போட்டு இருக்கிறார்.

சந்திப்பு

சந்திப்பு

அதன்படி இன்று ஆளுநர் ஆர். என் ரவியை சந்திக்க உள்ளார் ஜி.கே வாசன். இன்று மாலை இந்த சந்திப்பு நடக்க உள்ளது. மாலை 4.30 மணிக்கு இந்த சந்திப்பிற்கு நேரம் கொடுக்கப்பட்டு உள்ளது. பாஜக - தமிழ் மாநில காங்கிரஸ் உறவு குறித்து இவர்கள் ஆலோசனை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜி.கே வாசன் பெரும்பாலும் பாஜகவுடன் உள்ள கூட்டணி, அமைச்சர் பதவி தொடர்பாக பேச வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இத்தனை நாட்களாக அமைதியாக இருந்தவர் இன்று திடீரென ஏன் இப்படி ஆளுநரை சந்திக்க செல்கிறார் என்ற எழுந்துள்ளது. பாஜகவுடன் இணைப்பது பற்றி சமீபத்தில், ஜி.கே வாசன் தனக்கு நெருக்கமான நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது. பாஜகவில் இணைக்கலாமா? என்ன நினைக்கிறீர்கள்? பாஜகவில் சேர்ந்தால் நமக்கு எதிர்காலம் இருக்குமா என்று வாசன் கேட்டதாக குறிப்பிட்டு இருந்தோம்.

 பதில் என்ன?

பதில் என்ன?

பாஜக வேண்டாம் என்று இவர்கள் சொன்னதாக கூறப்படுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் இதற்கு நெகட்டிவ்வாக பதில் சொன்னதாக கூறப்படுகிறது. பாஜகவிற்கு சென்றால் பெரிய அளவில் பலன் அளிக்காது. தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியில் இல்லை. இப்போது அவர்களுடன் சேர்வது பலன் அளிக்காது பாஜகவில் இணைய வேண்டாம். மற்ற மாநிலங்களில் இருந்து பாஜகவில் இணைந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் தமிழ்நாட்டில் பாஜகவில் இணைவது சரியாக இருக்காது. ஏற்கனவே அங்கு பெரிய தலைவர்கள் இருக்கிறார்கள்.. நீங்களும் போனால் உங்களுக்கு அங்கு மவுஸ் இருக்காது என்று நிர்வாகிகள் அட்வைஸ் சொன்னதாக கூறப்படுகிறது.

English summary
G K Vasan to meet Governor R N Ravi today evening? What is the reason behind this?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X