சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கஜா புயல் நிவாரணம் : தமிழக அமைச்சர்களுடன் மத்திய குழு இன்று ஆலோசனை

கஜா புயல் சேதம் குறித்து மத்திய ஆய்வுக்குழு இன்று தமிழக அமைச்சர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: கஜா புயல் சேதம் குறித்து மத்திய ஆய்வுக்குழு இன்று தமிழக அமைச்சர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளது.

கஜா புயல் சேதம் குறித்து தமிழகம் வந்திருக்கும் மத்திய ஆய்வுக்குழு ஆய்வு செய்து வருகிறது. டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட புயல் பாதித்த மாவட்டங்களில் கஜா புயல் பாதிப்பு குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.

Gaja relief: Central team to discuss on the fund with Tamilnadu Ministers

இன்றோடு மத்தியக்குழுவின் ஆய்வுகள் முடிவடைகிறது. இன்று கடைசி நாளாக நாகை மற்றும் காரைக்காலில் ஆய்வு பணிகளை செய்ய உள்ளது. இந்த ஆய்வு மாலை 4 மணிக்குள் நிறைவடையும்.

இதையடுத்து இன்று மாலை 7 மணிக்கு மத்தியக்குழு தமிழக அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளது. கஜா புயல் சேதம் குறித்து தமிழக அமைச்சர்களுடன் மத்திய குழு ஆலோசனை நடத்தும்.

மத்தியக்குழு நாளை ஆய்வு அறிக்கை தாக்கல் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வருகிறது. இந்த நிலையில் இன்று நடத்தப்பட உள்ள இந்த ஆலோசனை முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த ஆலோசனையில், கஜா புயல் நிவாரணம் குறித்து மத்தியக்குழுவிடம் தமிழக அரசு ஆலோசனை செய்யும். தமிழக அரசு மத்திய அரசிடம் 15 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணமாக கேட்டு உள்ளது. இந்த நிவாரண கோரிக்கை குறித்தும் இன்று ஆலோசனை செய்யப்படும்.

English summary
Gaja relief: Central team to discuss on the fund with Tamilnadu Ministers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X