கஜாவை திறமையாக கையாண்ட அரசுக்கு நன்றி.. கமல்ஹாசன் பாராட்டு!
கஜா தாக்குதலை முன்னெச்சரிக்கையுடன் கையாண்ட அரசுக்கு நன்றி என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: கஜா தாக்குதலை முன்னெச்சரிக்கையுடன் கையாண்ட அரசுக்கு நன்றி என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கஜா புயல் கரையை கடந்துவிட்டது. கஜா புயலால் தமிழகம் முழுக்க நிறைய பாதிப்புகள் ஏற்பட்டு இருந்தாலும், தமிழக அரசு இதில் மிகவும் சிறப்பாக செயலாற்றியது.

நிறைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து பேரழிவில் இருந்து மக்களை காப்பாற்றியுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் நாம் கடந்து வந்த பேரிடர் காலங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்களை முன்னுதாரணமாகக் கொண்டு, தற்பொழுது கஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்செரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு நன்றி. பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களின் அயராத பணி போற்றத்தக்கது.
— Kamal Haasan (@ikamalhaasan) November 16, 2018
அதில், இதற்கு முன் நாம் கடந்து வந்த பேரிடர் காலங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்களை முன்னுதாரணமாகக் கொண்டு, தற்பொழுது கஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்சரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு நன்றி. பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களின் அயராத பணி போற்றத்தக்கது.
அரசு அதிகாரிகள்,காவல் துறை அதிகாரிகள்,ஊடகங்கள் தன்னார்வலர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.கட்சி அடையாளத்தைத்தவிர்த்து, பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் சேவை செய்துகொண்டிருக்கும் @maiamofficial களவீரர்கள் தொடர்ந்து தொண்டாற்றிடுமாறு கேட்டுக்கொள்கிறேன
— Kamal Haasan (@ikamalhaasan) November 16, 2018
அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், ஊடகங்கள் தன்னார்வலர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். கட்சி அடையாளத்தைத் தவிர்த்து, பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் சேவை செய்துகொண்டிருக்கும் மக்கள் நீதி மய்ய களவீரர்கள் தொடர்ந்து தொண்டாற்றிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சென்னை வெள்ளத்தின் போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்தவர் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications