விநாயகர் சதுர்த்தி: கொரோனா எச்சரிக்கையை மீறி சந்தைகளில் குவிந்த மக்கள் - பூக்கள் விலை அதிகரிப்பு
விநாயகர் சதுர்த்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் மக்கள் பூக்கள் உள்ளிட்ட பூஜைப் பொருட்கள் வாங்க குவிந்துள்ளனர்.
சென்னை: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சந்தைகளில் மக்கள் பூஜைப்பொருட்கள் வாங்க குவிந்துள்ளனர். முகூர்த்த நாட்கள், பண்டிகை நாட்கள் என்பதால் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. மாஸ்க் அணியாமல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று காவல்துறை அறிவித்துள்ள நிலையில் சமூக இடைவெளியின்றி சந்தைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
Recommended Video
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட தமிழக அரசு தடை விதித்துள்ளது. அத்துடன் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுக்க அறிவுறுத்தியுள்ள நிலையில், தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதேசமயம் பொதுமக்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடலாம் என்றும் தெரிவித்துள்ளது. கோவில்களில் வைக்கப்படும் சிலைகளைக் கரைக்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு அனுமதி இல்லை என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
தனி நபர்கள் தங்களின் சிலைகளை கோயில்களில் வைத்தால் சிலைகளை அறநிலையத்துறை மூலம் கரைக்க நடவடிக்கை எடுக்கப்படும் . பூஜை பொருட்கள் வாங்க கடைகளுக்கு செல்லும் மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். சென்னை முழுவதும் போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபடுவர். வழிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகளவு மக்கள் குவிந்துள்ளனர். விநாயகர் சதுர்த்தியை வீட்டிலேயே கொண்டாட பூஜை பொருட்கள் வாங்கும் மக்கள் அதிகளவில் குவிந்துள்ளனர். பழங்கள், பூக்கள் விற்பனை செய்யப்படும் சந்தைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. விநாயகருக்கு அதிகம் வைத்து வழிபடப்படும் ஒரு கட்டு அருகம்புல் விலை ரூ.40க்கு விற்கப்படுகிறது. வாழைத்தார், பழங்களின் விலை அதிகரித்துள்ளது.
தென் தமிழகத்தில் மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் முக்கியமானது. மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் மக்கள் பூக்கள், பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்களை வாங்க ஏராளமானோர் குவிந்துள்ளனர். பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மதுரை மாட்டுத் தாவணி பூ மார்க்கெட்டில் நேற்று ஒரே நாளில் ரூ.1 கோடிக்கு பூக்கள் விற்பனையாகியுள்ளன.
மதுரை மல்லிகை காலையில் கிலோ 1,000 ரூபாய்க்கு விற்பனையானது. 1 கிலோ ரோஜா ரூ.300, பிச்சிப்பூ ரூ.80, முல்லைப்பூ ரூ.80, செவ்வந்தி ரூ.150, கோழிக்கொண்டைப்பூ ரூ.150 என விற்பனையாகிறது. மொத்தம் 50 டன் பூக்கள் விற்பனைக்கு வந்தது. ஒரே நாளில் ரூ.1 கோடிக்கு பூக்கள் விற்பனையானதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.
திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள காட்டன் மார்க்கெட்டில் காய்கறிகள் மற்றும் பூக்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. இங்கு சேலம், நாமக்கல், சத்தியமங்கலம் மற்றும் நிலக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

சில்லரை மற்றும் மொத்த வியாபாரிகளும் பூக்களை வாங்கி வந்து விற்பனை செய்கிறார்கள். பூ மார்க்கெட்டில் மல்லி விலை கிலோ ரூ.200-க்கும், முல்லை கிலோ ரூ.150க்கும் விற்பனையான நிலையில் அமாவாசை முடிந்து இன்று வளர்பிறை முகூர்த்த தினம் என்பதால் பூக்கள் விலை அதிகரித்துள்ளது.
மல்லி கிலோ ரூ.200 ல் இருந்து மும்மடங்காக ரூ.1000க்கு விற்பனையாகிறது. முல்லை, ரூ.150-ல் இருந்து ரூ.450க்கும், கடந்த வாரம் ரூ.100 இருந்த ஒரு கிலோ அரளி, ரூ.250 க்கும், வரத்து குறைவால் கனகாம்பரம் கிலோ ரூ.900க்கும், செவ்வந்தி ரூ.200 க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தான் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் தற்போது பண்டிகை நாளையொட்டி அதிகமாக ஒரே இடத்தில் கூடுவதுடன் மாஸ்க் அணியாமலும் சுற்றி திரிந்து வருகின்றனர். இதனால் தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications