சிலிண்டர் தட்டுப்பாடு..மத்திய அரசை கண்டித்து.. தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
சென்னை: இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் காரணமாக கடந்த சில நாட்களாக கேஸ் சிலிண்டர் கிடைப்பதில் கடும் பிரச்சனை நிலவி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் சிலிண்டர் தேவை மற்றும் கையிருப்பு தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து, எல்பிஜி கேஸ் தட்டுப்பாடு விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் காரணமாக கடந்த சில நாட்களாக எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஹோட்டல்கள் மூடப்பட்டும், உணவு வகைகள் குறைக்கப்பட்டும் வருகின்றன. கமர்ஷியல் சிலிண்டர்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே பெட்ரோல், டீசலுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என்று பரவி வரும் வதந்தியால் பொதுமக்கள் பலரும் பெட்ரோல் பங்க்குகளில் குவியத் தொடங்கியுள்ளனர்.

கமர்ஷியல் சிலிண்டர்களின் விலையும் இரட்டிப்பாக உயர்ந்துள்ளதால் பேக்கரிகள், டீக்கடைகள், ஹோட்டல்கள் ஆகியவை மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை மேற்கொண்டு பல்வேறு முக்கிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.
இந்நிலையில், எல்பிஜி கேஸ் தட்டுப்பாடு விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாட்டுக்கான திட்டங்களும் இல்லை, சிலிண்டர்களும் இல்லை என்றும், தமிழ்நாட்டிற்கான திட்டங்கள் ஒதுக்கீட்டில் பாஜக புறக்கணித்து வருகிறது என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், சென்னை கிழக்கு அமைச்சர் சேகர்பாபு, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, சென்னை வடக்கு இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் வீரபாண்டியன், சென்னை மேற்கு- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் அபுபக்கர், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமூன் அன்சாரி, சென்னை தெற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோ பல்வேறு பகுதிகளில் பங்கேற்று உரையாற்றினர்.
அதேபோல, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சென்னை மேற்கு தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, சென்னை தென்மேற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம், சென்னை வடகிழக்கு எஸ்.டி.பி.ஐ. தலைவர் நெல்லை முபாரக், காஞ்சீபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications