அண்ணாமலைக்கு தைரியம் இருந்தா என்கிட்ட பேச சொல்லுங்கள்.. ஒருமையில் கொந்தளித்த காயத்ரி ரகுராம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தைரியம் இருந்தால் அண்ணாமலையை என் முன் வரச்சொல்லுங்கள். என்னை நேரடியாக சந்தித்து கூட அவரால் பேச முடியவில்லை என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காயத்ரி ரகுராம் செய்தியாளர்கள் சந்திப்பில் நான் திருப்பி திருப்பி விசாரணைக்கு கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் கிடைக்கவில்லை. இதனால் இரவு முழுவதும் எனது மனம் வேதனை அடைந்தது. இதனால் காலையில் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தேன்.

இன்று ஒரு லெட்டரை வெளியிட்டுள்ளார்கள். அதை ஏன் முன்பே வெளியிடவில்லை. இதை வைத்து என்னிடம் விசாரணை நடத்தியிருக்கலாமே. நான் கட்சியிலிருந்து வெளியே போகிறேன் என சொன்னதற்கு பிறகு இந்த லெட்டரை காண்பிக்கிறீர்கள். இன்னொரு அசிங்கமான விஷயம், நான் கட்சியை விட்டு வெளியே போனதும் காரணத்தை கண்டுபிடித்து என்னை எப்படி அசிங்கப்படுத்தலாம் என நினைக்கிறீர்கள்.

அண்ணாமலைக்கும் மனைவி இருக்கிறார்

அண்ணாமலைக்கும் மனைவி இருக்கிறார்

அண்ணாமலைக்கு மனைவி இருக்கிறார். அவர் இதுவரை வெளியே வந்ததில்லை, யாருக்குமே தெரியாது, கட்சி பணிகளிலும் ஈடுபட்டதில்லை. ஆனால் நாங்கள் கட்சி பணிகளை செய்ய வெளியே வந்திருக்கிறோம். எங்களை சகோதரன் போல் கருதி பக்கபலமாக இருந்திருக்க வேண்டாமா? நான் துபாய் போனது பாஜகவை சேர்ந்த ஒரு அண்ணன் தம்பியுடன். அப்படியிருக்கும் போதே என்னை கொச்சைப்படுத்தி பேசுகிறீர்கள்.

லெட்டர்

லெட்டர்

ஏதோ ஒரு லெட்டரை வைத்துக் கொண்டு என்னை எப்படி பேசலாம். எனக்கு மனசு கஷ்டமாக இருக்கிறது. நான் தூங்கி இரு மாதங்கள் ஆயிற்று. வயதான அம்மாவை வைத்துக் கொண்டு என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என அச்சமாக இருக்கிறது. சேவை செய்ய வேண்டும் என கட்சிக்கு வந்தால் இப்படித்தான் செய்வதா? அண்ணாமலையை வரச் சொல்லுங்கள்.

தைரியம் இருந்தால் வர சொல்லுங்க

தைரியம் இருந்தால் வர சொல்லுங்க

தைரியம் இருந்தால் வந்து என்னிடம் பேச சொல்லுங்கள். ஏன் இன்று வரை அவரால் என்னிடம் நேரடியாக பேச முடியவில்லை. திமுக நிர்வாகி சைதை சாதிக் பாஜகவில் உள்ள நடிகைகளை தவறாக பேசிய போது நாக்கை அறுத்துவிடுவேன் என அண்ணாமலை சொன்னாரே, தற்போது அவரே இப்படி பேசியுள்ளாரே! என்னை பற்றி 150 பேர் முன்னாடி தவறாக பேச நான் என்ன அவருக்கு சொந்த உறவா?

தேசிய தலைமையிடமும் புகார்

தேசிய தலைமையிடமும் புகார்

இந்த புகார்கள் குறித்து தேசிய தலைமையிடமும் நான் சொல்லிவிட்டேன். ஆனாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. 2 மாதங்கள் டைம் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால்தான் விலகும் முடிவுக்கு வந்துவிட்டேன். என்னுடைய இந்த நிலைக்கு காரணம் முழுக்க முழுக்க 100 சதவீதம் அண்ணாமலைதான். இவ்வாறு காயத்ரி ரகுராம் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+