தலைமை, பதவியை காக்க “100 பொய்”.. ஒரு உண்மை வந்தால் எல்லாம் “காலி”! யாரை சொல்கிறார் காய்த்ரி ரகுராம்?
சென்னை: திருச்சி சிவாவின் ஆபாச ஆடியோ குறித்து பதிவிட்டதற்காக 6 மாதங்கள் பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம், தற்போது ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.
பாஜகவை சேர்ந்த சிறுபான்மை அணி தலைவர் டெய்சியிடம், பாஜகவில் ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவா தொலைபேசியில் கொச்சையான வார்த்தைகளை திட்டிய ஆடியோ கடந்த வாரம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரது பெயர்களை சூர்யா சிவா பேசியது பயன்படுத்தியது கட்சிக்கு உள்ளேயும் சலசலப்பை ஏற்படுத்தியது.

காயத்ரி ரகுராம்
இந்த ஆடியோவை வெளியிட்ட ஊடகத்தின் ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்த பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம், பெண்களை குறிவைத்து தவறாக பேசினால் நாக்கு வெட்டப்படும் என உறுதியளித்துள்ளார். இப்படிப்பட்ட சமயங்களில் சொந்த கட்சிப் பெண்களை ஏன் தாக்க வேண்டும்? இந்த ஹைனாக்களுக்கு அழகு பார்க்க கட்சியில் மாநில பதவி கொடுத்தது மிகப்பெரிய தவறு.

ஜால்ரா ஆதரவாளர்கள்
ஆனால் சில மற்ற கட்சிகளில் இருந்து புதிதாக இணைந்தவர்களும், சில ஜல்ட்ரா ஆதரவாளர்களும் ஆபத்தானவர்கள் என்பதை உணரவில்லை. களப்பணி இல்லாமல் சிலர் ஜல்ட்ரா மட்டும் செய்தால் இதுதான் நடக்கும். திருச்சி சூர்யா & கோ அல்லது செல்வா & கோ மீண்டும் எங்களை ட்ரோல் செய்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.

இரத்தம் கொதிக்கிறது
சைக்கோ மூளையால் மட்டுமே முடியும். என் இரத்தம் கொதிக்கிறது. இந்த நபர்களை போலீசார் கைது செய்ய வேண்டும். மற்றும் கட்சி அவரை உடனடியாக நீக்க வேண்டும். குரல் அச்சுறுத்தலைக் கேட்டு இதயம் உடைந்தது. டெய்சிக்கு வலிமை. என் ஆறுதல் மற்றும் ஆதரவு." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

அண்ணாமலை
இதனை தொடர்ந்து, காயத்ரி ரகுராம் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதால் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அதேபோல் ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை திரு சூர்யா சிவா அவர்கள் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்துவதாக அண்ணாமலை அறிக்கை வெளியிட்டார்.

இணைந்த சூர்யா டெய்சி
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சி சூர்யாவும் டெய்சியும் இணைந்து பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய டெய்சி, "திருச்சி சூர்யா எனக்கு தம்பியை போன்றவர். எங்களுக்கு இடையே அக்கா - தங்கை போன்ற உறவு உள்ளது." என்றார். இந்த பேட்டியின் தொடர்ச்சியாக, சூர்யா சிவாவை கட்சியில் இருந்து 6 மாதம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் மாநிலத் தலைவர் அண்ணாமலை.

தொடரும் ட்வீட்டுகள்
சர்ச்சைகள் ஓய்ந்ததைபோல் இருந்தாலும் காயத்ரி ரகுராம், டெய்சி, திருச்சி சூர்யா மற்றும் பாஜக பிரமுகர்கள் நேர்காணல்கள், சமூக வலைதளங்கள் இது பற்றி தொடர்ந்து கருத்து தெரிவித்துக்கொண்டே இருக்கிறார். இந்த நிலையில் காயத்ரி ரகுராம் கட்சி மற்றும் யார் பெயரையும் குறிப்பிடாமல் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார்.

100 பொய்கள்
அதில், "உங்கள் தலைமையையும் பதவியையும் காப்பாற்ற 100 பொய்களைச் சொல்லலாம். ஆனால் ஒரு உண்மை உங்கள் 100 பொய்களை அழித்துவிடும். தலைவனாக சித்தரிக்கும் முன் மனிதனாக இரு. நான் இதை ஒரு புத்தகத்தில் படித்தேன். ஆனால் இப்போது கருத்துகளைப் படிக்கிறேன். ஏன் இவ்வளவு வெறுப்பு? படித்ததை பிடித்தது, இது எல்லா தலைவர்களுக்கும் பொருந்தும் என்று நினைத்தேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
டெல்லியிலேயே இருங்க.. அண்ணாமலைக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. திடீரென மெகா ட்விஸ்ட்.. என்ன காரணம்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications