மிஸ்டர் திருமாவளவனிடம் இதையெல்லாம் கேட்டு சொல்லுங்க சூர்யா.. வம்பிழுக்கும் காயத்ரி ரகுராம்!
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் ஏன் இத்தனை ஆண்டுகளாக பார்வதி அம்மாவின் குடும்பத்திற்கு எதுவும் செய்யவில்லை? அதை கேட்டு சொல்லுங்கள் சூர்யா என பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெய்பீம் படத்தை பலர் எதிர்த்தும் பலர் பாராட்டியும் வரும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் ஜெய்பீம் படம் குறித்து பாராட்டி நடிகர் சூர்யாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நன்றி கடிதம்
அதற்கு சூர்யா நன்றி தெரிவித்து பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில் பழங்குடியினரின் நீண்ட கால பிரச்சினைகளுக்கு தீர்வு காண தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது அனைவருக்கும் மனநிறைவை தந்துள்ளது. ஊக்கமூட்டும் தங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி என சூர்யா பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மக்கள்
இந்த பரஸ்பர கடிதத்தை பார்த்த காயத்ரி ரகுராம், சூர்யாவின் கடிதத்தில் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். இது குறித்து பாஜக காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில் நான் மக்களுக்கு என்ன செய்கிறேன் என்று ஒவ்வொருவரும் என்னிடம் கேட்டபோது. நான் எம்.பி, எம்.எல்.ஏ அல்ல, உங்களைப் போல் நான் சம்பாதிக்கவில்லை.

முன்னேற்றம்
நான் குறைவாக சம்பாதிக்கிறேன் என்று சொல்ல வெட்கப்படவில்லை. என்னால் முடிந்ததை மட்டுமே மக்களுக்கு செய்ய முடியும். நான் மற்றவர்களிடமிருந்து நிதி பெறவில்லை. நான் அறங்காவலர் அல்ல அல்லது நான் ஒரு சூப்பர் ஹீரோ இல்லை. நான் ஒரு சாதாரண பெண் கடினமான காலங்களில் மற்றவர்களுக்கு உதவுபவர். அவர் இதுவரை பழங்குடி மக்களுக்கு என்ன செய்தார்? அவர்கள் வாழ்வில் ஏன் முன்னேற்றம் இல்லை? கேட்டு சொல்லுங்க.

சமூக நீதி போராளியா
30 வருடங்களாக அரசியலில் இருக்கிறார்.. சிறந்த பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர் பகவான் பிர்சா முண்டாவை நீங்களா அல்லது திருமா வாழ்த்தினீர்களா? அது போல் திரு.தொல்.திருமாவளவன் அவர்களுக்கு ஏன் இத்தனை ஆண்டுகளாக பார்வதி அம்மாவின் குடும்பத்திற்கு எதுவும் செய்யவில்லை? தயவு செய்து கேட்டு சொல்லுங்கள். பழங்குடியினக் குடும்பத்திற்கு படத்தைப் பாராட்டினால் மட்டும் போதுமா? அவர் சமூக நீதிப் போராளியா? என கேள்வி எழுப்பியுள்ளார் காயத்ரி.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications