நாமெல்லாம் விதைகள்.. தாமரை மலரும்.. காயத்ரி ட்வீட்.. "ஆமா அரளி விதைங்க".. கலாய்க்கும் நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பலர் நம்மை புதைக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் நாம் விதைகள் என்று அவர்களுக்குத் தெரியாது. தாமரை மலரும் என பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

தாமரை மலரும், பாஜக ஆட்சி தமிழகத்தில் ஏற்படும் என்பது பாஜகவினரின் லட்சியமாகும். ஜெயலலிதா, கருணாநிதிக்கு பிறகு தமிழகத்தில் கால்பதிக்க எத்தனையோ முயற்சிகளை பாஜக எடுத்து வருகிறது.

எனினும் அக்கட்சியால் சோபிக்க முடியவில்லை. கடந்த தமிழக சட்டசபை தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி வைத்து அக்கட்சியின் வலுவான ஆதரவுள்ள இடங்களில் போட்டியிட்டுதாலேயே பாஜக 4 எம்எல்ஏக்களை பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே.

தாமரை

தாமரை

ஒவ்வொரு முறையும் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கும் போது தாமரை சேற்றில்தான் மலரும். தமிழகத்தில் மலராது என்றே விமர்சிக்கிறார்கள். இதற்கு காரணமாக மக்கள் விரோத திட்டங்கள் என சொல்லப்படுகிறது. அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் கூட தாமரை மலரும், தாமரை மலரும் என்றே நட்சத்திர பிரச்சாரம் செய்பவர்கள் மேடைக்கு மேடை தெரிவித்தார்கள்.

தமிழிசை சவுந்திரராஜன்

தமிழிசை சவுந்திரராஜன்

ஏற்கெனவே தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் மாநிலத்தில் பாஜக காலூன்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவிட்டார். ஒவ்வொரு முறையும் தமிழக பாஜக முகமாக தமிழிசை தங்கள் கட்சியின் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வந்தார். அவர் கடந்த 2019-ஆம் ஆண்டு தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு பதிலாக எல் முருகன் தமிழக பாஜக தலைவரானார்.

சட்டசபைக்கு எம்எல்ஏக்கள்

சட்டசபைக்கு எம்எல்ஏக்கள்

அவரது முயற்சியால் தமிழக சட்டசபைக்கு 4 பாஜக எம்எல்ஏக்களை அனுப்பி வைத்தார். இவருக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டதும் இவருக்கு பதிலாக பாஜக தலைவராக கே அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த தேர்தலில் தமிழகத்தில் பாஜக மலரும் என்ற லட்சியத்தை நோக்கி பயணிக்கிறார். மேலும் தமிழகத்தில் அதிமுக வெர்சஸ் திமுக என்றிருந்த நிலையை பாஜக வெர்சஸ் திமுக என்ற நிலைக்கு கொண்டு வர பாடுபடுவதாக கூறி வருகிறார்.

காயத்ரி ரகுராம் ட்வீட்

காயத்ரி ரகுராம் ட்வீட்

இந்த நிலையில் பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் பலர் நம்மை புதைக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் நாம் விதைகள் என்று அவர்களுக்குத் தெரியாது. தாமரை மலரும் என தெரிவித்துள்ளார். காயத்ரி எந்த ட்வீட் போட்டாலும் அதற்கு நெட்டிசன்கள் பதிலளிக்கிறார். இந்த ட்வீட்டை விட்டுவிடுவார்களா என்ன?

அரளிவிதை

அரளிவிதை

விதை தான்‌...ஆனால் அரளிவிதை....அதான் புதைக்க துடிக்கிறோம்....

விதை இல்லையே

விதை இல்லையே

தாமரை க்கு முதலில் விதையே கிடையாதே

அது தாமரை விதை அல்ல

அது தாமரை விதை அல்ல

காய்ந்த ஆட்டுப் புழுக்கை பார்ப்பதற்கு தாமரை விதை போலவே தான் இருக்கும்.

தமிழ்நாட்டில் ஆட்டுப் புழுக்கையை விதைத்து விட்டுத் தாமரைக்காக காத்திருக்கிறீர்கள்.

மலரலையே

மலரலையே

நீங்க போட்டுருக்க போட்டோ ல கூட தாமரை மலரல அப்ரோம் எங்க என்கிறார் இந்த வலைஞர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+