ஜெம் வீரமணி கேஸ்! ரயில்வே தொழிற்சங்க முன்னாள் நிர்வாகி மகன் பிரகாஷுக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெம் வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்கில் தேடப்பட்டு வரும் ரயில்வே தொழிற்சங்க முன்னாள் நிர்வாகி கண்ணையாவின் மகன் பிரகாஷுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட சென்னை காவல் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவின் பாலியல் தடுப்புப் பிரிவு போலீஸாரை தொடர்பு கொண்டு ரகசிய புகார் ஒன்றை அளித்தார்.

blue corner notice

தனது அலுவலகத்திற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்து பென்டிரைவ் ஒன்றை கொடுத்ததாகவும் அதில் பல சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட வீடியோ காட்சிகள் இருப்பதாகவும் அந்த நபர் தெரிவித்திருந்தாராம்.

பென்டிரைவ்

அந்த பென்டிரைவை போலீஸார் ஆய்வு செய்த போது அதில் வயதான ஒரு நபர் சிறுமிகளுக்கு பரிசு பொருட்களை கொடுத்துக் கொண்டே அவர்களிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபடும் காட்சிகளை கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்து விசாரணையை தொடங்கினர். இந்த நிலையில் அந்த வீடியோவில் இருந்த பெரியவர் ஜெம் வீரமணி என்பது தெரியவந்தது.

84 வயது முதியவர்

அப்போது ஜெம் வீரமணிக்கு வயது 84. ஏழைப்பட்ட சிறுமிகளுக்கு கல்வி கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி அவர்களை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதற்காகவே அவர் தேனாம்பேட்டையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வைத்திருந்தது தெரியவந்தது.

சிறுமிகளுக்கு தொல்லை

அந்த வீட்டை அவரது உதவியாளர் சாந்தியும் அவரது கணவர் மகேந்திரன் சிம்ஹனும் பராமரித்து வந்தார். ஜெம் வீரமணி, சிறுமிகளை அந்த வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களுக்கு பரிசு பொருட்களை கொடுப்பாராம்.

பின்னர் அந்த சிறுமிகளிடம் முறைகேடாக நடந்து கொண்டதாக தெரிகிறது. இந்த புகாரின் பேரில் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து சிறுமிகளை பாலியல் கொடுமை செய்த வீரமணி மீது போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மூன்று பேரிடம் விசாரணை

மூவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த பாலியல் வழக்கில் எஃப்ஐஆரில் தனது பெயரை சேர்க்காமல் இருக்க அரசியல் புள்ளிகள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு ஜெம் வீரமணி ரூ 70 கோடி வரை செலவழித்துள்ளாராம். இதற்காக சென்னை ஈசிஆர் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ரூ 130 கோடி மதிப்பிலான நிலத்தை ரூ 70 கோடிக்கு விற்று செட்டில்மென்ட் செய்தாராம்.

கண்ணையா மகன்

இந்த நிலத்தை விற்க எஸ்ஆர்எம்யூ ரயில்வே தொழிற்சங்க முன்னாள் நிர்வாகி கண்ணையாவின் மகன் பிரகாஷ் உதவி செய்ததாக விசாரணையில் தெரியவந்தது.

சம்மன்

இதையடுத்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அவரது வீட்டில் கொடுக்க சென்ற போது வீட்டில் அவர் இல்லை, வெளிநாட்டில் இருப்பதாக சொல்லப்பட்டதால் அவரை கைது செய்ய முடியவில்லை.

பிரகாஷுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்

இதையடுத்து பிரகாஷுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நிலையில் அவர் தற்போது லண்டனில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து அவரை கைது செய்ய சென்னை காவல் துறை ப்ளூ கார்னர் நோட்டீஸை வெளியிட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ப்ளூ கார்னர் நோட்டீஸ்

ப்ளூ கார்னர் நோட்டீஸ் என்பது சர்வதேச அளவில் குற்றவியல் புலனாய்வு அமைப்பான இன்டர்போல் மூலம் வெளியிடப்படும் எச்சரிக்கை அறிவிப்பு ஆகும். வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் நபர் குறித்த கூடுதல் தகவல்களை சேகரிக்கவும் அடையாளம் காணவும் இருப்பிடத்தை கண்டறியவும் இன்டர்போல் அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள் அனைத்துக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்படும்.

அவர் எங்கிருக்கிறார், என்ன செய்கிறார், போலீஸால் தேடப்படும் நபர் அவர்தானா என்ற விவரங்களை கண்டறிய பயன்படுத்தப்படும் விசாரணைக்கான உதவி ஆகும். ரெட் கார்னர் நோட்டீஸ் என்றால் அந்த நபரை கைது செய்ய வேண்டும் என்பதாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+