‛Get Out Modi’.. ஏன்யா இந்தி பேச சொல்லி கட்டாயப்படுத்துறீங்க? தமிழில் விளாசிய நடிகர் பிரகாஷ் ராஜ்
சென்னை: உங்களுக்கு இந்தி தெரியும்.. நீங்க இந்தியில் பேசுறீங்க.. எங்களையும் இந்தியில் பேச சொல்லி கட்டாய படுத்துகிறீங்க.
ஏன்னா உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும் இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழில் பதிவிட்டு மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளார். அதுமட்டுமின்றி அந்த பதிவில் ஆங்கிலத்தில் கெட்அவுட் மோடி என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு உள்ளதால் பாஜகவினர் டென்ஷனாகி உள்ளனர்.
மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு தர வேண்டிய ரூ.2,152 கோடியை மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. முதல்வர் ஸ்டாலின் உள்பட அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டும் மத்திய அரசு வழங்காமல் உள்ளது.

தேசிய கல்வி கொள்கையின்படி மும்மொழி கொள்கையை அமல்படுத்தினால் மட்டுமே அந்த நிதி விடுவிக்கப்படும். இல்லாவிட்டால் தமிழகத்துக்கான ரூ.2,152 கோடி நிதி விடுவிக்கப்படாது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெளிவாக கூறிவிட்டார். இந்த விஷயத்தில் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது.
இதற்கிடையே கரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‛‛நேற்று முன்தினம் உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார்.. பிரதமர் மோடி மட்டும் தமிழ்நாட்டிற்கு வந்தார் என்றால், நாங்கள் முதலில் கோ பேக் மோடி என்று சொன்னோம்.. நாங்கள் இனி கெட் அவுட் மோடி என்று சொல்வோம் என்று உதயநிதி சொல்கிறார்.. உதயநிதி ஸ்டாலினுக்கு நான் சொல்கிறேன்.. நீ சரியான ஆளாக இருந்தால்.. உன் வாயில் இருந்து கெட் அவுட் மோடின்னு சொல்லிப்பாரு..'' என்று சவால் விட்டார்.
இதையடுத்து எக்ஸ் பக்கத்தில், ‛GetOutModi' என்ற ஹேஷ்டேக்கை நேற்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் எக்ஸ் பக்கத்தில் டிரெண்ட் செய்தனர். அதோடு பிரதமர் மோடி, மத்திய அரசு மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அந்த ஹேஷ்டேக்கில் அவர்கள் பதிவுகளை வெளியிட்டனர்.
இந்நிலையில் தான் தமிழக அரசுக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், ‛‛உங்களுக்கு இந்தி தெரியும்.. நீங்க இந்தியில் பேசுறீங்க.. எங்களையும் இந்தியில் பேச சொல்லி கட்டாய படுத்துகிறீங்க.
ஏன்னா உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும்.. இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது..'' என கூறியுள்ளார்.
மேலும் இந்தி பதிவில் அவர் 2 ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தி உள்ளார். ஒன்று எப்போது அவர் பயன்படுத்தும் Justasking ஹேஷ்டேக். இன்னொன்று என்னவென்றால் GetOutModi. இந்த ஹேஷ்டேக் என்பது தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரால் நேற்று முதல் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஹேஷ்டேக்கை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பயன்படுத்தி வரும் நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜும் அதனை பயன்படுத்தி உள்ளார். இது பாஜகவினரை டென்ஷனாக்கி உள்ளது.

அதுமட்டுமின்றி நடிகர் பிரகாஷ் ராஜ் பாஜகவுக்கு எதிராக குரல் கொடுப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பலமுறை அவர் பாஜக, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அந்த வரிசையில் புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு ஏற்கவில்லை. அந்த கல்வி கொள்கை மூலம் பாஜக இந்தியை திணிப்பதாக திமுக அரசு குற்றம்சாட்டி வருகிறது. அதோடு மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு தர வேண்டிய ரூ.2,152 கோடியை மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை.
இதுதொடர்பாக தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே பஞ்சாயத்து நடந்து வரும் நிலையில் தான் தமிழக அரசுக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ் ராஜ் இந்த பதிவை செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications