AMMK Symbol Gift Box: ஆஹா.. அமமுகவிற்கு சிறப்பான சின்னம் 'பரிசுப்பெட்டி'.. டிடிவி தினகரன் ஹேப்பி
Recommended Video

சென்னை: சிறப்பான பரிசுப் பெட்டி சின்னத்தை தங்களுக்கு, ஒதுக்கியுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் புகழ்ந்துரைத்துள்ளார்.
"மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் 59 வேட்பாளர்களுக்கும் "பரிசுப்பெட்டி" சின்னத்தை ஒதுக்கிய இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்" என்று தமிழில் ட்வீட் செய்துள்ளார். முன்னதாக ஆங்கிலத்தில் வெளியிட்ட ட்வீட்டில், சிறப்பான பரிசு பெட்டி சின்னத்தை ஒதுக்கியதாக புகழ்ந்துள்ளார் டிடிவி தினகரன்.

அமமுகவின், 59 வேட்பாளர்களுக்கும் குக்கர் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்த நிலையில், இன்று பரிசுப்பெட்டி சின்னத்தை ஒதுக்கியுள்ளது. தினகரன் தரப்பு ஆர்.கே.நகரில் பணப் பரிசு வழங்கியதாக கூறி பிற கட்சிகள் குற்றச்சாட்டுகள் முன்வைத்து வரும் நிலையில், பரிசுப் பெட்டி சின்னத்தை தினகரன் தரப்புக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதை என்னவென்று சொல்வது?
Thanks to the Election Commission of India for allocating the wonderful symbol "Gift Pack" for all the 59 candidates as per the order of the Hon'ble Supreme Court of India. #ElectionCommissionOfIndia #giftbox #தேர்தல்ஆணையம் pic.twitter.com/9973kc7Yqz
— TTV Dhinakaran (@TTVDhinakaran) March 29, 2019
பரிசுப் பெட்டியோடு தினகரன் வருகிறார் என்று இனி அதிகாரப்பூர்வமாகவே பிற கட்சிகள் கேலி பேசக்கூடுமே என்ற கவலை ஒருபக்கம் என்றால், பரிசுப் பெட்டி என்றாலே நமது நினைவுதான் வரும். இதனால் ஆசைப்படும் வாக்காளர்கள் ஓட்டுக்கள் நமக்குத்தான் என்ற ஒரு மகிழ்ச்சியும் டிடிவி தினகரன் தரப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான், சிறப்பான சின்னம் என தினகரன் புகழ்ந்துரைத்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications