நீ என் கூட வரமாட்டியா? இன்ஸ்டாகிராம் காதல் வளர்த்த வசந்தி! பெற்றோரை பலி கொண்ட ’லவ்’! பதறி போன சென்னை
சென்னை : சென்னையில் கள்ளக்காதலியின் பெற்றோர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தலைமறைவான கள்ளக்காதலன் உள்பட 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கொலைக்கு மகளே உடந்தையாக இருந்ததாரா எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை குரோம்பேட்டை அடுத்த ஜமீன் ராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (50). அப்பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்துள்ளார்.
இவரது மனைவி மஞ்சுளா (45). தம்பதியருக்கு ராஜேஷ் என்ற மகன், வசந்தி, அமுலு என 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் 3 பேரும் திருமணம் ஆனதால் தனது குடும்பத்தாருடன் தனியாக வசித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் காதல்
இதில், மகள் வசந்தி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், வசந்திக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக சென்னை, அண்ணாநகர் பகுதியை சேர்ந்த மோசஸ் என்பவர் அறிமுகமாகியுள்ளார். இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

குடிகார காதலன்
இந்த விவகாரம் இவர்களது பெற்றோருக்கு தெரிந்தும் கண்டும் காணாமல் இருந்துள்ளனர். சமீபத்தில் அதே பகுதியில் தனியாக வீடு எடுத்து கணவர் மனைவி போல் குழந்தைகளுடன் இருவரும் வாழ்ந்து வந்தனர். மோசஸ்க்கு குடிபழக்கம் இருப்பதால் அடிக்கடி மது அருந்திவிட்டு வசந்தியை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், கடந்த 30ம் தேதி வசந்தி அவரது குழந்தைகளோடு மாங்காடு பகுதியில் உள்ள அவரது சகோதரி அமுலு வீட்டிற்கு சென்றுள்ளார்.

மிரட்டல்
இதனைதொடர்ந்து மோசஸ் வசந்தியை செல்போனில் தொடர்பு கொண்டு நீ வீட்டுக்கு வராவிட்டால், உனது பெற்றோரை கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார். ஆனால் வசந்தி வீட்டுக்கு வரவில்லை. இதனால், ஆத்திரமடைந்த மோசஸ் வசந்தியின் பெற்றோர் வீட்டுக்கு சென்று தலை, கழுத்து, முகம், தொடை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டு கொலை செய்துள்ளார். இதனைதொடர்ந்து வசந்தி தனது பெற்றோர்களின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது அவர்கள் போன் எடுக்காததால் சந்தேகம் அடைந்த வசந்தி அவரது சகோதரர் ராஜேசிடம், வீட்டிற்கு சென்று தாய்-தந்தையை பார்த்துவிட்டு வரும்படி கூறியுள்ளார்.

கொடூர கொலை
வீட்டிற்கு சென்று பார்த்த போது இருவரும் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த இரட்டை கொலை தொடர்பாக விசாரித்து வந்தனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது கடந்த 30ம்தேதி இரவு மோசஸ் மற்றும் மற்றொரு நபர் என 2 பேர் இருசக்கர வாகனத்தில் வந்து சம்பவம் நடைபெற்ற வீட்டிற்கு சென்று செல்வது பதிவாகியிருந்தது. இதனையடுத்து அந்த 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் கொலையில் பலியானவர்களின் மகளுக்கு தொடர்புள்ளதா எனவும் விசாரணை நடைபெற்று வருகின்றது.












Click it and Unblock the Notifications