எடப்பாடிக்கு அடுத்த இடம் தாங்க.. நான் ஜெயிக்க வைக்கிறேன்! ரகசியமாக பேசிய சர்ச்சை புள்ளி! அப்போ விஜய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் இரண்டாம் கட்ட தலைவராக தனக்கு பொறுப்பு வழங்கினால்.. அதிமுகவை அடுத்த தேர்தலிலேயே வெற்றிபெற வைக்க முடியும் என்று முக்கியமான நிர்வாகி ஒருவர் பேசி வருவதாக கூறப்படுகிறது.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 9 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்தது. கடந்த லோக்சபா தேர்தலில் 10 தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது.

edappadi palaniswami vijay tamilaga vetri kazhagam

அதன்படி 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் என மொத்தம் 9 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்தது. கடைசியாக கடந்த லோக்சபா தேர்தலில் 10 வது முறையாக தோல்வி அடைந்து உள்ளது.

அதிமுக கட்சி பல விதமாக பிரிந்தது. ஓபிஎஸ் தரப்பு, டிடிவி தரப்பு தென் மண்டலங்களில் , டெல்டாவில் வாக்குகளை பிரிக்கின்றனர். இவர்களை இணைக்க வேண்டும். அதிமுகவில் வேட்பாளர் தேர்வு சொதப்பல். பல தொகுதிகளில் உள்ளூர் ஆட்களுக்கே தெரியாதவர்கள் வேட்பாளர்கள் ஆனார்கள். சில இடங்களில் வெளியூர் ஆட்கள் வேட்பாளர்கள் ஆனார்கள். கல்லை கூட ஜெயிக்க வைக்க எடப்பாடி ஒன்றும் ஜெயலலிதா இல்லையே.. இப்படி பல காரணங்களால் அதிமுக கடுமையான பிரஷரை எதிர்கொண்டு வருகிறது.

அரசியல் ஆலோசகர்: இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி பிரபல அரசியல் ஆலோசகர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருக்கிறாராம். தமிழ்நாட்டில் தேர்தல் பணிகளை செய்ய பேசிக்கொண்டு இருக்கிறாராம். அதன்படி பிரஷாந்த் கிஷோரிடம் பேசுவதற்கு முயன்று கொண்டு இருக்கிறாராம். அவரை வைத்து 2026 தேர்தல் பணிகளை செய்யும் திட்டத்தில் எடப்பாடி உள்ளாராம்.

இப்படிப்பட்ட நிலையில்தான் அதிமுகவில் இரண்டாம் கட்ட தலைவராக தனக்கு பொறுப்பு வழங்கினால்.. அதிமுகவை அடுத்த தேர்தலிலேயே வெற்றிபெற வைக்க முடியும் என்று முக்கியமான நிர்வாகி ஒருவர் பேசி வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வேறு ஒரு கட்சியில் சர்ச்சையான நபர் அவர். இதன் காரணமாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதையடுத்து அவர் விஜயுடன் இணைவார் என்று கூறப்பட்டது. அந்த நபர் பிரஷாந்த் கிஷோருக்கு நெருக்கம். அதோடு இல்லாமல் விஜய்க்கும் நெருக்கம். அதனால் அவர் விஜயுடன் இணைவார்.. தேர்தல் பணிகளை செய்வார் என்று கூறப்பட்டது.

ஆனால் விஜய் அவரை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த சர்ச்சை புள்ளி எடப்பாடி உடன் பேசிக்கொண்டு இருக்கிறாராம். எடப்பாடி உடன் கரம் கோர்க்க ஆலோசனை செய்து வருகிறாராம். ஆனால் எடப்பாடி இதில் இன்னும் முடிவு எடுக்கவில்லை. கட்சியில் இரண்டாம் கட்ட தலைவர் பதவி கொடுக்க வேண்டும்.. அப்படி கொடுத்தால் கண்டிப்பாக உங்களை வெற்றிபெற வைக்க முடியும் என்று ஆலோசனை வழங்கி வருகிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+