தங்கத்தை அடமானம் வைத்து.. 2 கிலோ தங்க நகையுடன் சென்னை கோயம்பேட்டில் ஜாலி! மாறுவேஷத்தில் வந்த போலீஸ்
சென்னை: தங்கம் விலை 1 லட்சம் ரூபாயை எட்டிவிடும் அனைவரும் அச்சப்பட்டிருந்த நிலையில், திடீரென விலையில் மாற்றம் தென்பட்டுவருகிறது. ஆனாலும், ஏழை, எளிய மக்களால் தங்கத்தை நினைத்துகூட பார்க்க முடிவதில்லை.. இப்படிப்பட்ட சூழலில், சென்னை கோயம்பேட்டில் கிலோ கணக்கில் நகைகளை வைத்துக்கொண்டு ஒருவர் ஜாலியாக பொழுதை கழித்துள்ளார்.. அவரிடம்தான் தற்போது விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் கெகன் ராம்.. இவருக்கு 55 வயதாகிறது.. ராஜஸ்தான் என்றாலும், சென்னையிலேயே 30 வருடங்களுக்கும் மேலாக வசித்து வருகிறார்..

சென்னை கோயம்பேடு சரஸ்வதி நகர் பகுதியில் அடகு கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்.. இதற்காக இதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து, குடும்பத்துடன் தங்கி வருகீறார்..
நீண்ட காலமாக இங்கேயே உள்ளதால், அவர்மீது அப்பகுதி மக்களுக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.. இதனால் பொதுமக்கள், அவசரத்துக்கு பணம் தேவை என்றால், உடனே கெகன் ராமிடம் அடகு வைத்து பணம் பெற்றுக் கொள்வார்கள்.. பிறகு வட்டியை செலுத்தி விட்டு, தங்கள் நகையை மீட்டு கொள்வார்கள். அந்த வகையில் இவரது நகைக் கடைக்கு ரெகுலர் கஸ்டமர்களும் அதிகம் உண்டு.
கிலோ கணக்கில் தங்கம் நகைகள்
இந்நிலையில், ஒன்றரை வருடத்திற்கு முன்பு, கெகன்ராம் உடம்பு சரியில்லாமல் இறந்து விட்டார்.. எனவே அடகு கடையை அவரது 25 வயது மகன் சுனில் என்பவர் நடத்தி வந்தார்.
இந்நிலையில் கடந்த 8ம் தேதி அடகு கடை பூட்டப்பட்டிருந்தது.. இதனால் அவசரத்துக்கு நகை வைத்து பணம் கேட்க வந்தவர்கள், திரும்பி சென்றுவிட்டார்கள்.. ஆனால், அடுத்தடுத்த நாட்களும் கடை திறக்கப்படவேயில்லை.. எந்நேரமும் மூடப்பட்டிருந்ததால், ஏற்கனவே நகையை அடகு வைத்தவர்கள் சுனிலுக்கு போன் செய்திருக்கிறார்கள்.
தங்க நகை அடகு கடை
ஆனால், சுனிலின் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.. எனவே, நகைகளை அடகு வைத்தவர்கள், சுனில் குடியிருக்கும் வீட்டுக்கு வந்தனர்.. அப்போது கதவு பூட்டப்பட்டிருந்தது. இதனால் ஹவுஸ் ஓனரிடம் சுனில் குறித்து விசாரித்தபோதுதான், அவர்கள் குடும்பத்துடன் ராஜஸ்தானுக்கே திரும்பி சென்றுவிட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக கோயம்பேடு போலீசில் இதுகுறித்து புகார் செய்தனர்.
போலீசாரும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கினர்.. ராஜஸ்தான் போலீசாரிடம் சுனில் பற்றின விவரத்தை சொல்லி, சென்னைக்கு வந்தால் தகவல் தரும்படியும் கோயம்பேடு போலீசார் அலர்ட் செய்தார்கள். மேலும் சுனில் எப்போது செல்போனை ஆன் செய்வார் என்றும் கண்காணித்து கொண்டேயிருந்தனர்.
மாறுவேடத்தில் போலீஸ்
இந்நிலையில், வளசரவாக்கத்தில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டிற்கு சுனில் வருவதாக கோயம்பேடு போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்துள்ளது.. உடனே போலீசார் வளசரவாக்கம் பகுதியில் மாறுவேடத்தில் கண்காணிக்க துவங்கினார்கள்.. அப்போது சுனில், உறவினர் வீட்டுக்கு வந்தபோது, அங்கே மறைந்திருந்த அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பிறகு ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.. அதற்குள் சுனில் கிடைத்துவிட்டதாக நகைகளை அடகு வைத்தவர்களுக்கு விஷயம் தெரிந்துவிட்டது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோயம்பேடு போலீஸ் ஸ்டேஷனில் குவிந்துவிட்டார்கள். கடுமையான கோபத்தில் இருந்த பொதுமக்களை போலீசார் சமாதானப்படுத்தினார்கள்.
நூற்றுக்கணக்கானோர் தந்த புகார்
"சுனிலை கைது செய்தாகிவிட்டது. இனிமேல்தான் அவரிடம் விசாரணையை நடத்த போகிறோம். நகைகளை பற்றியும் கேட்க போகிறோம். அனைத்து விவரங்களையும் பெற்றுக்கொண்டு, உங்களது நகைகளை கிடைக்க ஏற்பாடு செய்கிறோம். நகைகளை அடகு வைத்தவர்கள் புகார் தரலாம் என்றனர். இதையடுத்து, அத்தனை பேரும் புகார்களை எழுதி தந்தனர்.. இந்த புகார்களின் பேரில் சுனிலிடம் போலீசார் விசாரணை ஆரம்பமானது.
அப்போது சுனில் போலீசாரிடம் பல்வேறு பகீர் தகவல்களை வாக்குமூலமாக கூறியிருக்கிறார்.. அதில், "நான் 10ம் வகுப்பு வரை படித்துள்ளேன். அப்பா இறந்துவிட்டதால் அடகு கடையை நடத்தும்படி, அம்மா சொன்னார். பிடிக்காமல்தான் அடகு கடையை கவனித்து வந்தேன்.
வேறு கடையில் அடமானம்
அப்போதுதான், ஏராளமானோர் நகைகளை கொண்டு வந்து அடமானம் வைத்தார்கள். உடனே நான் அந்த நகைகளை வேறு கடையில் அடமானம் வைத்துவிட்டு, அந்த பணத்தில் மதுஅருந்தி ஜாலியாக பொழுதை கழித்தேன்.
இந்த ஜாலி எனக்கு பழகிவிட்டதால், அடகு வைத்த விற்க துவங்கினேன்.. இதனால் பணம் கொட்டியது.. அதற்குள் சிலர் வட்டியை தந்து, அடகு வைத்த நகைகளை மீட்க வந்தனர். இது எனக்கு பயத்தை தந்துவிட்டது. மன உளைச்சலையும் தந்துவிட்டது. அதனால்தான் ராஜஸ்தானுக்கே யாருக்கும் தெரியாமல் சென்று விட்டேன். போலீசார் என்னை தேடுகிறார்களா? என்பதை தெரிந்து கொள்ள சென்னை வந்தேன். அதற்குள் இப்படி மாட்டிக் கொண்டேன்" என்றார்.
2 கிலோ தங்க நகைகள்
இப்போது புழலில் உள்ளார் சுனில். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையும் நடவடிக்கை எடுத்து வருகிறது. விசாரணையின்போதுதான், தங்க நகைகள் குறித்த விவரங்கள் தெரியவரும் என்கிறார்கள்.
ஆனால், கடந்த ஒன்றரை வருடத்தில், பொதுமக்கள் அடகு வைத்த ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான 2 கிலோ தங்க நகைகளையும் விற்று ஜாலியாக இருந்தாராம் சுனில்..!!!
-
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு












Click it and Unblock the Notifications