Good Bad Ugly OTT: போட்றா வெடிய.. தல தரிசனம்! குட் பேட் அக்லி ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்.!
சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்குமார் கூட்டணியில் வெளிவந்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ட்ரீட் ஆக அமைந்திருக்கிறது. படம் பிளாக்பஸ்டர் ஹிட் என ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் முதல் நாளிலிருந்து வசூலில் பட்டையை கிளப்பி உள்ளது. இந்த நிலையில் இந்த படம் ஓடிடியில் எப்போது ரிலீஸ் (gbu ott release date) ஆகும் என்பது குறித்தான தகவல்கள் வெளியாகி உள்ளது..
பட்டங்களைக் கொண்டு தன்னை அழைக்கக் கூடாது என அஜித் குமார் கூறியிருந்தாலும் 'அல்டிமேட் ஸ்டார்' 'தல' என கொண்டாடி வருகின்றனர் அஜித் ரசிகர்கள். ஆனாலும் அவர் நடிப்பில் வெளியான சில படங்கள் சொதப்பியதால் ரசிகர்கள் கடும் மன உளைச்சலில் இருந்தனர்.
கடந்த மாதம் வெளியான விடாமுயற்சி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்து நிலையில் ரசிகர்களின்
கடுமையான எதிர் விமர்சனத்தை சந்தித்தது. சந்தேகமே இல்லாமல் அந்த படம் தோல்வி படம் தான். இந்த நிலையில் ஆதி ரவிச்சந்திரன் உடன் இணைந்தார் அஜித் குமார்.

ட்ரிபிள் ஏ படத்தின் மூலம் சொதப்பினாலும் மார்க் ஆண்டனி படம் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு மிகப்பெரிய புகழை பெற்று தந்தது. இதை அடுத்து அதே ஸ்டைல் படம் செய்ய வேண்டும் என நினைத்த அஜித்குமார் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் இணைந்தார். மைத்ரி மூவிஸ் தயாரிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. அஜித்குமார் உடன் திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரபு, சுனில், பிரசன்னா, சிம்ரன், ஜாக்கி ஷெரஃப், யோகி பாபு, பிரியா வாரியர் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்திருந்தது.
படம் வெளியான முதல் நாளில் இருந்தெ ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. தொடர்ந்து 30 கோடி ரூபாய் வசூலை முதல் நாளே ஈட்டியதாகவும் சொல்லப்படுகிறது. அடுத்தடுத்து விடுமுறை தினங்கள் வர இருக்கும் நிலையில் படத்தின் வசூல் 7 நாட்களில் 114 கோடியை தாண்டி உள்ளது. அதுவும் இந்த வசூல் தமிழ்நாட்டில் மட்டும் தானாம். வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் சேர்த்தால் 150 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பள்ளி விடுமுறை உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தில் மட்டுமே 200 கோடி ரூபாய் வசூலை எட்டும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என்ன ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் படத்தை ஆர்வத்தோடு எதிர்நோக்கி இருக்கும் நிலையில் எப்போது படம் ஓடிடியில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
ஓடிடி பிளே கொடுத்துள்ள தகவல்படி நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் அஜித்குமாரின் குட் பேட் அக்லி படத்தின் வெளியிட்டு உரிமையை பெற்றிருக்கிறது. தற்போது வசூலில் பட்டையை கிளப்பி வருவதால் படத்தின் ஓடிடி ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் அடுத்த வரும் மே மாதம் இரண்டாவது வாரத்தில் இந்த படம் ஒடிடியில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. எப்போது வெளியாகும் என்ற சரியான தேதி நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்தால் விரைவில் வெளியிடப்படும் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications