சென்னையில் கண்டக்டர் இல்லாத தங்கரதம் அரசு பஸ்.. ஓஎம்ஆர் ரூட்டின் வரப்பிரசாதம்.. டிக்கெட் விலை ஹேப்பி
சென்னை: சிங்கப்பூர் மற்றும் லண்டன் போன்ற வெளிநாடுகளில் மட்டுமே காணக் கிடைத்த கண்டக்டர் இல்லாத அதிநவீன சொகுசு பஸ் சேவை இப்போது நம்ம சென்னை மாநகரிலும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.. தமிழக போக்குவரத்துத் துறையின் இந்த அதிரடி மாற்றம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.. குறிப்பாக ஐடி ஊழியர்கள் மற்றும் சொகுசு பயணத்தை விரும்புவோரை இலக்காகக் கொண்டு இந்த பஸ்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் சென்னையில் 625 மின்சாரப் பேருந்துகளைப் படிப்படியாக அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.. அதன் ஒரு பகுதியாக, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் ஜொலிக்கும் தங்க நிறத்தில் பிரீமியம் ஏசி வசதியுடன் கூடிய பஸ் சேவையை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

இந்த பஸ்கள் பார்ப்பதற்கு மிகவும் நவீனமாகவும், சர்வதேச தரத்திலான வசதிகளுடனும் காட்சியளிக்கின்றன.. முதற்கட்டமாக 5 பஸ்கள் மட்டும் இந்தச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன..
இந்த தங்கரத பேருந்துகள் சென்னையின் மிக முக்கியமான தகவல் தொழில்நுட்பப் பாதையான ஓஎம்ஆர் சாலையை மையமாக வைத்து இயக்கப்படுகின்றன..
அரசு பேருந்து
குறிப்பாக கோயம்பேடு முதல் சிறுசேரி ஐடி பார்க் வரையிலான 570S வழித்தடத்திலும், திருவான்மியூர் முதல் தாம்பரம் வரையிலான 91-வது வழித்தடத்திலும் இவை சோதனை அடிப்படையில் ஓடத் தொடங்கியுள்ளன.. சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும் இந்த வழித்தடங்களில் ஐடி நிறுவனங்கள் அதிகம் இருப்பதால், சொந்த கார்களில் அலுவலகம் செல்வோர் இந்தப் பேருந்து சேவைக்கு மாறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பேருந்துகளின் முக்கியமான ஸ்பெஷாலிட்டியே, இதில் கண்டக்டர் கிடையாது என்பதுதான்.. லண்டன் மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் இருப்பதைப் போன்ற இந்த வசதி சென்னையில் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது..
50 டூ ரூ.150 ரூபாய்
பயணிகள் தங்களின் பயணச்சீட்டுகளை சென்னை ஒன் ஆப் (Chennai One App) என்ற செயலி மூலமாக மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.. இதற்கான கட்டணம் 50 ரூபாயில் தொடங்கி பயண தூரத்திற்கு ஏற்ப 150 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.. சாதாரண பேருந்து பயணத்தை விட இது சற்று கூடுதல் கட்டணம் என்றாலும், கார்களில் செல்வதை விட இது சிக்கனமானது மற்றும் வசதியானது..
பயணிகளின் வசதிக்காக இந்த பஸ்கள் தாழ்தள வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.. இதனால் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக ஏறி இறங்க முடியும்..
பஸ்கள் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதி, சொகுசான இருக்கைகள், இலவச வைஃபை, செல்போன் சார்ஜ் செய்யும் வசதி, பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்கள் மற்றும் அவசரகால பொத்தான்கள் என ஒரு சொகுசு காரில் இருக்கும் அனைத்து வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.. மேலும் டிஜிட்டல் வழித்தடப் பலகைகள் மூலம் அடுத்தடுத்த நிறுத்தங்கள் குறித்த தகவல்கள் பயணிகளுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்படும்..
தங்க ரதம் - சென்னையின் வரப்பிரசாதம்
வழக்கமான அரசுப் பேருந்துகளில் இருக்கும் சத்தம் மற்றும் கூட்ட நெரிசலில் இருந்து விடுபட்டு, நிம்மதியான பயணத்தை விரும்பும் சென்னை மக்களுக்கு இந்தத் தங்கரதம் ஒரு வரப்பிரசாதமாகும்..
சொந்த வாகனங்களைப் பயன்படுத்துபவர்கள் பொதுப் போக்குவரத்திற்கு மாறுவதன் மூலம் நகரின் போக்குவரத்து நெரிசலும் கணிசமாகக் குறையும்.. இந்தத் திட்டம் சென்னையில் வெற்றிகரமாகச் செயல்படும் பட்சத்தில், தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களுக்கும் இந்த நவீன மின்சாரப் பேருந்து சேவை விரிவுபடுத்தப்படும் எனத் தெரிகிறது..!!!
-
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே












Click it and Unblock the Notifications