சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2021 ஜனவரி வடசென்னைக்கு சூப்பர் டைம்.. சென்னை மெட்ரோ நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூா் விம்கோ நகா் வரை மெட்ரோ ரயில் பணிகள் நிறைவு பெறப்போகிறது. எனவே அடுத்த ஆண்டு ஜனவரி கடைசி வாரம் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் ரயில் சேவை தொடங்க வாய்ப்பு உள்ளதாக நல்லதொரு தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டப்பணிகள் முடிந்து சென்னை விமானநிலையம்-வண்ணாரப்பேட்டை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல்-பரங்கிமலை வரை இரண்டாம் வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதன்பின்னர் வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூரை அடுத்து உள்ள விம்கோ நகா் வரை 9.051 கிலோ மீட்டா் தொலைவிற்கு மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டப்பணிகள் ரூ.3 ஆயிரத்து 770 கோடி செலவில் நடைபெற்றது.

பணிகள் தாமதம்

பணிகள் தாமதம்

இதில் சுரங்கப்பாதையில் சா்.தியாகராயா் கல்லூரி, கொருக்குப்பேட்டை ஆகிய இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்களும், உயா்மட்டப்பாதையில் தண்டையாா்பேட்டை, சுங்கச்சாவடி, தாங்கல், கவுரி ஆசிரமம், திருவொற்றியூா், விம்கோநகா் ஆகிய 6 மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன கடந்த ஏப்ரல் மாதத்தில் பணிகளை முடித்து, கடந்த ஜூன் மாதம் முதல் ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.

ஜூலையில் தொடங்கிய பணிகள்

ஜூலையில் தொடங்கிய பணிகள்

ஆனால், நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக, மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.. பொதுமுடக்கம் தளா்வுக்கு பிறகு, மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் ஜூலை மாதம் மீண்டும் தொடங்கி, பணிகள் நடந்தது.

 பிப்ரவரி முதல் வாரம்

பிப்ரவரி முதல் வாரம்

இந்நிலையில், வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூா் விம்கோ நகா் வரை மெட்ரோ ரயில் விரிவாக்கப்பணிகள் ஏறக்குறைய முடிந்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி கடைசி வாரம் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் சேவை தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற உயா்மட்ட கூட்டத்தில், இந்த நீட்டிக்கப்பட்ட பாதை இரண்டு மாதத்தில் திறக்கப்படும் என்று மாநில அரசுக்கு மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

பாதுகாப்பு ஆணையா் ஆய்வு

பாதுகாப்பு ஆணையா் ஆய்வு

இந்த மெட்ரோ ரயில் பாதை நீட்டிப்பு திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் வடசென்னை மக்களுக்கு சிறந்த போக்குவரத்தாக அமையும். இந்த திட்டத்துக்கான சிக்னல் முறை ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் நிறுவப்படும். இதன்பிறகு, மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையா் தலைமையிலான குழுவினா் ஆய்வு செய்ய உள்ளாரக்ள்

மெட்ரோ சேவை எப்போது

மெட்ரோ சேவை எப்போது

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறும் போது, வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூா் விம்கோ நகா் வரை பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்களில் கட்டுமானம், அவசரகால வெளியேற்றத்துக்கான வசதிகள், கட்டுமானத்தின் தரம் மற்றும் பயணிகளுக்கான வசதிகள் ஆகியவை பரிசோதிக்கப்படும். நிறைவுப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. வண்ணாரப்பேட்டை-விம்கோ நகா் விரிவாக்க பாதையில் ரயில் இயக்கத்துக்கு ஏற்றது என்று சான்றிதழை மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையா் வழங்கும்போது, ரயில் சேவைகள் தொடங்கும். இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை வரும் ஜனவரி அல்லது பிப்ரவரியில் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது என்றார்கள்.

English summary
Washermenpet - Tiruvottiyur Wimco Nagar Metro Rail project is nearing completion in Chennai. So there is good news that the train service is likely to start in the last week of January or the first week of February next year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X