போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு.. தமிழக அரசு செம்ம அறிவிப்பு.. நிறைவேறப்போகும் நீண்ட நாள் கோரிக்கை!
சென்னை : அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் காரணமாக 2003 க்கு பின் பணியில் சேர்ந்த போக்குவரத்து கழக ஊழியர்கள் அனைவருமே பயன்பெற உள்ளார்கள்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதை ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.
1998 முதல் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் 01.04.2003 பின்பு கைவிடப்பட்டு, அந்த தேதிக்கு பின் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு CPS திட்டத்தை அரசு கொண்டு வந்தது

2003க்கு பின் சேர்ந்தவர்கள்
எனினும் மீண்டும் 1998 ஓய்வூதிய திட்டத்தையே அனைவருக்கும் (2003 க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கும்) நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தொடர்ச்சியாக போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்

பழையபடி மாறுகிறது
இந்நிலையில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்" என அறிவித்து இருந்தது. அதன் படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர போக்குவரத்துத்துறை துணை செயலாளர் உத்தரவிட்டிருக்கிறார்

செலவு எவ்வளவு
பழைய ஓய்வூதிய திட்டத்தின் மூலம் பயன்பெறும் போக்குவரத்து ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கான தொகையையும் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் இதற்கான முன்மொழிவை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் போக்குவரத்து துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

வருங்கால வைப்பு நிதி
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பணி ஓய்வுபெற்ற பின்னர் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதியை விடுவிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications