“டுவிஸ்டு” கொடுத்த கோபி, சுதாகர்! போலி டாக்டர் பட்டம்.. தங்களையே கலாய்த்து தள்ளிய பரிதாபங்கள் வீடியோ
இனி விருது வழங்குபவர்கள் யார் என்று பின்னணியை விசாரித்த பிறகே செல்ல வேண்டும் என கோபியே தெரிவித்து இருக்கிறார்.
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்டோருக்கு போலி டாக்டர் பட்டம், யூடியூபர்கள் கோபி, சுதாகருக்கு விருதுகளை தனியார் அமைப்பு வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அதை வைத்தே அவார்டு பாவங்கள் என்ற பெயரில் வீடியோ வெளியிட்டு இருக்கிறது பரிதாபங்கள் யூடியூப் சேனல்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைந்து உள்ள விவேகானந்தர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம் இசையமைப்பாளர் தேவாவுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார்.
அவருடன் சேர்த்து பலருக்கு பல்வேறு பெயர்களில் விருதுகள் வழங்கப்பட்டன. நடிகர் வடிவேலு இந்த நிகழ்ச்சிக்கு வராததால் அவருக்கு வீடு தேடி சென்று டாக்டர் பட்டத்தை வழங்கினார்கள்.

போலி டாக்டர் பட்டம்
இந்த நிலையில் இவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியதாக செய்திகள் வெளியாகின. இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் வடிவேலுவுக்கும் தேவாவுக்கும் தாங்கள் டாக்டர் பட்டத்தை வழங்கவில்லை என மறுத்ததுடன் அவர்களுக்கு வழங்கப்பட்டது போலி டாக்டர் பட்டம் என்று விளக்கம் கொடுத்தார்.v

துணை வேந்தர் விளக்கம்
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "அண்ணா பல்கலைக்கழக வளாகத்தை கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்காக பயன்படுத்திய கண்டிக்கத்தக்கது. ஓய்வுபெற்ற நீதியரசர் டாக்டர் வள்ளிநாயகத்தையும் ஏமாற்றி உள்ளனர். அவரை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் விழா நடைபெறுவதாக சொல்லி சிறப்பு விருந்தினராக அழைத்து இருக்கலாம்.

நீதியரசர் வள்ளிநாயகம்
மருத்துவர் வள்ளிநாயகம் வருவதாக எங்களிடம் சொன்னதால் நாங்கள் இடம் கொடுத்தோம். இருவரையும் வித்தியாசமாக அவர்கள் உபயோகப்படுத்தி உள்ளது கண்டிக்கத்தக்கது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தை தவறாக பயன்படுத்தியதற்காக அபராதம் விதிப்பதுடன் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கவுரவ டாக்டர் பட்டத்தை ஒரு பல்கலைக்கழகம்தான் கொடுக்க வேண்டும்.

கடிதம் போலியா?
இப்படி ஒரு தவறான செயல் இந்த அரங்கத்தில் வைத்து நடந்ததற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் பெயர் இருந்ததால் டீனும் கடிதத்தை பார்த்தவுடன் அனுமதி வழங்கிவிட்டார். இது வள்ளிநாயகம் கொடுத்த கடிதமா அல்லது அதுவும் போலியா என தெரியவில்லை. இந்திய அரசு அதில் முத்திரை இருந்தது.

நீதிபதி விளக்கம்
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அலைபேசி மூலமாக விளக்கம் கொடுத்து இருக்கிறார் ஓய்வுபெற்ற நீதியரசர் வள்ளிநாயகம். அதில், "நான் கையெழுத்து போடவில்லை. உண்மையாகவே எனக்கு என்னவென்று தெரியாது. நான் ஒரு சிறப்பு விருந்தினராக மட்டுமே பங்கேற்றேன். அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்ததால் நான் வந்தேன்." என்று கூறினார்.

கோபி, சுதாகருக்கு விருது
இந்த நிகழ்ச்சியில் பரிதாபங்கள் யூடியூப் சேனலை நடத்தி வரும் கோபி மற்றும் சுதாகருக்கு "இன்ஸ்பிரேஷ்னல் யூத் ஐகான்" என்ற விருது வழங்கப்பட்டது. நகைச்சுவை கலைஞரும், பேச்சாளருமான ஈரோடு மகேஷ், நடன இயக்குநர்கள் சாண்டி, கோகுல், நடிகர் கஜராஜ் உள்ளிட்டோருக்கும் இந்த விழாவில் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

பரிதாபங்கள் வீடியோ
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸ் விழா ஏற்பட்டாளரை கைது செய்து இருக்கும் நிலையில், இந்த விழாவை விமர்சிக்கும் வகையில் அவார்ட் பாவங்கள் என்ற பெயரில் கோபி மற்றும் சுதாகர் பரிதாபங்கள் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்கள். அதில் விருது ஏற்பாடு செய்தவர்களையும், தங்களையுமே அவர்கள் கலாய்த்து இருக்கிறார்கள். இனி விருது வழங்குபவர்கள் யார் என்று பின்னணியை விசாரித்த பிறகே செல்ல வேண்டும் என கோபியே அதில் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications