ஆளுநர் ஒட்டுமொத்த மக்களையும் அவமதித்து விட்டார்.. நிபந்தனையற்ற மனிப்பு கேட்க வேண்டும்: சீமான் பரபர
சென்னை: தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் உரையாற்றிக் கொண்டு இருக்கும் போதே அவை மரபுகளை மீறி, பாதியிலேயே ஆளுநர் வெளியேறி, பேரவையையும், அமைச்சர்களையும், உறுப்பினர்களையும் தமிழக ஆளுநர் அவமதித்துள்ளதாகவும் தமிழ்நாட்டு ஆளுநரின் இத்தகைய தரம் தாழ்ந்தப்போக்கினை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என்றும் சீமான் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று கூடியது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 10 மணியளவில் தனது உரையை சட்டசபையில் வாசித்தார். இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு, திராவிட மாடல், சமூகநீதி, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கர், அண்ணா உள்ளிட்ட பல வார்த்தைகள், முக்கிய பத்திகளை வாசிக்காமல் தவிர்த்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாதியில் வெளியேறிய ஆளுநர்
ஆளுநரின் இந்த உரைக்கு திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி முன்பாகவே அவருக்கு கண்டனம் தெரிவித்ததுடன், ஆளுநர் உரை அவைக்குறிப்பில் இடம் பெறக்கூடாது என்று தீர்மானம் கொண்டு வந்து சட்டசபையில் நிறைவேற்றினார். இதனால் ஆளுநர் அவையிலிருந்து பாதியில் வெளியேறினார். தமிழ்நாடு ஆளுநரின் செயல் அவை மாண்புக்கும் சட்ட விதிகளுக்கும் எதிரானது என்று தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

சீமான் கடும் கண்டனம்
அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது:- திராவிடம், திராவிடன், திராவிட நாடு, திராவிட ஆட்சி, திராவிட மாடல் உள்ளிட்ட வார்த்தைகளில் நாம் தமிழர் கட்சிக்குத் துளியளவும் உடன்பாடு இல்லையென்றாலும், திராவிடக் கொள்கையோடு, தமிழ்த்தேசியத்திற்கு எத்தனை முரண்கள் இருந்தாலும், எட்டு கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு பரிந்துரைத்த வார்த்தைகளை, ஆளுநர் தனது உரையில் படிக்க மறுத்ததை ஒருபோதும் ஏற்க முடியாது.

தரம் தாழ்ந்தப்போக்கு
இது முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் இறையாண்மையின் மீது நடத்தப்பட்ட கொடுந்தாக்குதலாகும். மேலும், மாண்புமிகு தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் உரையாற்றிக்கொண்டிருக்கும்போதே அவை மரபுகளை மீறி, பாதியிலேயே ஆளுநர் வெளியேறி, பேரவையையும், அமைச்சர்களையும், உறுப்பினர்களையும் அவமதித்துள்ளார். தமிழ்நாட்டு ஆளுநரின் இத்தகைய தரம் தாழ்ந்தப்போக்கினை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும்
மேலும், தமிழ் மண்ணிற்கும், மக்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாத, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நியமனப் பொறுப்பாளரான ஆளுநர் தமது மலிவான நடவடிக்கையால் தமிழ்நாடு அரசினையும், மக்களாட்சி முறைமையினையும் மட்டும் அவமதிக்கவில்லை. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் அவமதித்துள்ளார். உடனடியாக ஆளுநர் ஐயா ஆர்.என்.ரவி அவர்கள் தமிழ்நாடு அரசிடமும், தமிழ்நாட்டு மக்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
Thirumavalavan: சிதம்பரம் இடைத்தேர்தல் செலவை திருமாவளவன் ஏற்பாரா? சீமான் கேள்வி -
யாருக்கு ஓட்டு போட போறீங்க! வாரிசு அரசியலுக்கா? சீமான் சட்டசபைக்கு போகனும்! சீனுக்குள் வந்த சேரன்! -
Land Rover Defender கான்வாயில் வரும் ஸ்டாலின் பெயரில் ஒரு வாகனம் கூட இல்லை! சீமான் சொத்து எவ்வளவு? -
ஒரே ஒரு தோட்டா.. காட்டி விடுவேன் டாட்டா.. சமூக விரோதிகளுக்கு சீமான் வார்னிங் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம்












Click it and Unblock the Notifications