தமிழக அரசுக்கு பறந்த லெட்டர்! பிரதமர் பாதுகாப்பில் குறைபாடு? விளக்கம் கேட்கும் ஆளுநர் ஆர்.என். ரவி
சென்னை: பிரதமர் மோடி தமிழகம் வந்த போது பாதுகாப்பில் குறைபாடு உள்ளதாகக் குற்றஞ்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது குறித்து ஆளுநர் ரவி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்றது. இந்த 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 186 நாடுகளில் இருந்தும் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே இந்த போட்டி நடந்து முடிந்து நான்கு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இந்தத் தொடரில் தொடக்க விழாவில் பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு குறித்து இப்போது பரபரப்பு கிளப்பியுள்ளது.

பிரதமர் மோடி
தமிழக தலைநகர் சென்னையில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இதன் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டிருந்தார். இந்த தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றிருந்தது. பிரமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், 180 நாடுகளைச் சேர்ந்த சர்வதேச பிரதிநிதிகள் எனப் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த தொடக்க விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தமிழ்நாடு போலீசார் செய்திருந்தனர்.

குற்றச்சாட்டு
இது நடந்த நான்கு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு செய்யப்பட்ட பாதுகாப்பில் குளறுபடி இருந்தாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது பாதுகாப்புக்கு முக்கிய உபகரணமான மெட்டல் டிடெக்டர் மற்றும் டோர் டிடெக்டர் கருவிகள் பல இடங்களில் முறையாக வேலை செய்யவில்லை என்றும் கூறி இருந்தார். பழுதடைந்த பராமரிப்பில்லாத கருவிகளை சில இடங்களில் போலீசார் வைத்திருந்ததாகவும் அண்ணாமலை குற்றச்சாட்டிருந்தார்.

விளக்கம்
மேலும், இது தொடர்பாக அண்ணாமலை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியையும் நேரில் சந்தித்திருந்தார். பிரதமர் மோடி பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று அவர் மனுவும் அளித்திருந்தார். இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, பிரதமர் மோடிக்கு செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாட்டில் எவ்வித குறைபாடுகளும் இல்லை என்றும் எஸ்பிஜி பாதுகாப்புக் குழுவும் கூட எவ்வித குறையும் சொல்லவில்லை என்றார்.

நவீனம்
மேலும், தமிழ்நாடு போலீசாரிடம் இருக்கும் அனைத்து உபகரணங்களும் நவீனமானவை என்று குறிப்பிட்ட டிஜிபி சைலேந்திரபாபு, மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாடு போலீசாரிடம் பாதுகாப்பு உபகரணங்கள் இரண்டு மடங்கு அதிகமாகவே உள்ளது என்றும் அவ்வப்போது பழைய உபகரணங்களை மாற்றிவிடுவதாகவும் தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு போலீசாரின் கருவிகள் நவீனமாக இருப்பதாலேயே அண்டை மாநில போலீசார் கூட தமிழக போலீசாரின் பாதுகாப்பு உபகரணங்களை வாங்கிச் சென்று பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

ஆளுநர் ரவி
இதற்கிடையே இந்த விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் மோடிக்குப் பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்குமாறு தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் ரவி கடிதம் எழுதியுள்ளார். ஆளுநரின் அந்த கடிதத்தில் பிரதமர் தமிழகம் வந்தபோது வேலை செய்யாத மெட்டல் டிடெக்டர் கருவி பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்தும் பாதுகாப்பில் குறைபாடு இருந்ததா என்பதும் குறித்து விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் எனச் சொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications