மதுரை ஜல்லிக்கட்டு.. நேரில் பார்க்க வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி? பாதுகாப்பை அதிகரிக்கும் காவல்துறை!
சென்னை: உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் காண ஆளுநர் ஆர்.என்.ரவி வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர் வருவதால், மதுரை அவனியாபுரம் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் ஆணையர் நரேந்திரன் நாயகர் நேரில் ஆய்வு செய்தார்.
தமிழ்நாட்டின் கிராமங்களில் டிசம்பர் மாதம் முதலே ஜல்லிக்கட்டு ஃபீவர் தொடங்கிவிடும். டிசம்பர் மாதத்திலேயே மாடுகளுக்கான பயிற்சியை மாட்டின் உரிமையாளர்கள் தொடங்கிவிடுவார்கள்.
பாரம்பரிய விளையாட்டாக உள்ள ஜல்லிக்கட்டு என்றாலே மதுரை தான். பொங்கல் பண்டிகையன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டும், மாட்டு பொங்கல் பண்டிகையன்று பாலமேடு ஜல்லிக்கட்டும், காணும் பொங்கலன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும் நடைபெறும்.

ஜல்லிக்கட்டு
இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கு என்றே வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பார்வையாளர்கள் வருவார்கள். வெளிநாட்டில் இருந்து பார்வையாளர்கள் வரும் உள்ளூர் மக்கள் மட்டுமே விடுவார்களா என்ன.. அந்த அளவிற்கு தமிழ்நாட்டு மக்கள் மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

ஏற்பாடுகள் தீவிரம்
அதேபோல் மக்களின் விளையாட்டாக உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை காண ஒவ்வொரு ஆண்டும் அரசியல்வாதிகளும் தவறாமல் வருவார்கள். காளையை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், அரசியல்வாதிகளும் பரிசுகளை வழங்குவார்கள். இந்த நிலையில் நடப்பாண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

அவனியாபுரத்தில் ஆளுநர்?
இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்க்க வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவனியாபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்ட காவல் ஆணையர் நரேந்திரன் நாயகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

டெல்லி செல்லும் ஆளுநர்
சட்டசபை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தரப்பில் திமுக எம்பி-க்கள் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் நாளை டெல்லிக்கு புறப்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி, நாளை மறுநாள் மாலை மீண்டும் தமிழ்நாடு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 15ம் தேதி நடக்கவுள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்க்க உள்ளார். ஜல்லிக்கட்டு போட்டியை ஆளுநர் பார்க்க வரும் தகவல், கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications