சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்பீடு! போலீஸ் ரேடாரில் டிடிஎஃப் வாசன்.. Twin Throttlers யூடியூப் சேனலை முடக்க குவியும் புகார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: அதிவேகமாக பைக்கை ஓட்டுவதற்காகவும் அதிக அளவில் கூட்டத்தை கூட்டுவதற்காகவும் யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது போலீஸார் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்கள். அப்படியென்றால் போலீஸாருக்கு நிறைய புகார்கள் சென்றிருக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

Recommended Video

    243கிமீ வேகம்... TTF Vasan மீது புகார் கொடுக்கும் நெட்டிசன்கள் *Tamilnadu

    டிராவல் விபிலாகரான கோவையை சேர்ந்த டிடிஎஃப் வாசன் (22), லடாக் மற்றும் நேபாளத்திற்கு தனது ரூ 11 லட்சம் சூப்பர் பைக்கில் சென்று இளைஞர்களின் மனங்களை கவர்ந்தார்.

    அண்மையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அன்னூரில் பிறந்தநாள் விழா மீட்டை வாசன் நடத்தியிருந்தார். இந்த நிகழ்வுக்கு கிட்டதட்ட 5000 பேர் வரை வந்திருந்தனர். வந்தவர்கள் எல்லாம் உரிமையுடன் வாசனை தம்பி, அண்ணா, மகன் என்றெல்லாம் அழைத்தனர்.

    அப்போ கன்ஃபார்ம்.. திமுக அரசிடம் “ஓபிஎஸ் மகன்” பரபரப்பு கோரிக்கை! சிக்கலில் எடப்பாடி அப்போ கன்ஃபார்ம்.. திமுக அரசிடம் “ஓபிஎஸ் மகன்” பரபரப்பு கோரிக்கை! சிக்கலில் எடப்பாடி

    போக்குவரத்து நெரிசல்

    போக்குவரத்து நெரிசல்

    போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அறிந்த போலீஸார் டிடிஎஃப் வாசனை எச்சரித்தனர். இதையடுத்து சென்னை அம்பத்தூரில் உள்ள விளையாட்டு பொருட்கள் விற்பனையகத்திற்கு வருவதாக யூடியூப்பில் டிடிஎஃப் வாசன் தெரிவித்திருந்ததால் அந்த கடையில் கூட்டம் அலைமோதியது. அப்போதும் அங்கு வந்த போலீஸார் இது போல் முன்னறிவிப்பின்றி கூட்டத்தை கூட்டக் கூடாது என எச்சரித்து அனுப்பினர்.

    200 கி.மீ.

    200 கி.மீ.

    இந்த நிலையில் டிடிஎஃப் வாசன் தனது பைக்கில் 200 கி.மீட்டருக்கு மேல் வேகமாக செல்கிறார். மேலும் அவர் 245 கி.மீ., 238 கி.மீ. வேகத்தில் பைக்கை ஓட்டி சென்ற காட்சிகளை தனது யூடியூப்பில் வெளியிட்டிருந்தார். இதையடுத்து சிறிதும் பொறுப்பில்லாமல் டிடிஎஃப் வாசன் இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக திகழ்கிறார் என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    அதி வேக வாகனம் ஓட்டுவதால் ஆபத்து

    அதி வேக வாகனம் ஓட்டுவதால் ஆபத்து

    இவர் இத்தகைய வேகத்தில் வாகனத்தை ஓட்டுவதால் ஆபத்து இவருக்கு இருப்பதை போல் சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கும் இருக்கிறது. எனவே சாலையில் பயணிக்கும் வாகனஓட்டிகளின் நலன் கருதி இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. மேலும் இவரை கைது செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சென்னை போலீஸுக்கு புகார்

    சென்னை போலீஸுக்கு புகார்

    இந்த நிலையில்தான் அதிமுகவை சேர்ந்த பூவை ஷாகீர் கான் என்பவர் தமிழ்நாடு போலீஸ், சென்னை டிராபிக், சென்னை போலீஸுக்கு டேக் செய்து 240 கி.மீ.ருக்கு மேல் வேகமாக செல்லும் யூடியூபர் வாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இது போல் அதிகவேகமாக மற்றவர்களும் வாகனங்களை ஓட்டும் நிலை ஏற்படும் என தெரிவித்திருந்தார்.

    சேனலை முடக்க வேண்டும்

    சேனலை முடக்க வேண்டும்

    உடனே சென்னை காவல் துறை, உங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்கிறோம் என தெரிவித்தனர். பெரிய விபத்துகள் நடக்கும் முன்னர் இவரையும் இவரது யூடியூப் சேனலையும் முடக்க வேண்டும். இதே யூடியூபர்கள் வெளிநாடுகளுக்கு சென்றால் அங்கு போக்குவரத்து விதிகளை பின்பற்றுகிறார்கள். இங்கு மட்டும் ஏன் பின்பற்றுவதில்லை. டிடிஎஃப் வாசனை பார்த்து நிஞ்ஜா பைக்கை வாங்கித் தர வேண்டும் என நிறைய பேர் தங்களது பெற்றோரை தொல்லை செய்கிறார்கள் என அந்த சென்னை போலீஸ் ட்வீட்டின் கீழ் நிறைய பேர் கமென்ட் செய்துள்ளார்கள்.

    English summary
    Greater Chennai Police is going to take action against TTF Vasan for overspeeding of bike?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X