குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது தெரியுமா?.. டி.என்.பி.எஸ்.சி கொடுத்த முக்கிய அப்டேட்
சென்னை: கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வை சுமார் 15 லட்சம் பேர் எழுதியிருந்தனர். குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது என்பது குறித்து தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், தற்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவது எப்போது என்பது குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.
தமிழகத்தில் அரசுப்பணியிடங்களை டிஎன்.பி.எஸ்.சி எனப்படும் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நிரப்பி வருகிறது.குரூப் 1, குரூப் 2 ,2 ஏ, குரூப் 4 என பல்வேறு பதவிகளுக்காக டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடத்தி வருகிறது.
குரூப் 4 தேர்வு இதில் விஏஓ மற்றும் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படும் குரூப் 4 தேர்வு போட்டித்தேர்வுகள் எழுதுபவர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் உள்ளது.
குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கூடுதல் பணியிடங்கள்.. டிஎன்பிஎஸ்சி கொடுத்த அப்டேட்

குரூப் 4 தேர்வு
குரூப் 4 தேர்வுகளை பல லட்சம் போட்டித்தேர்வர்கள் எழுதி வருகின்றனர். போட்டித்தேர்வர்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படும் தேர்வாகவும் குரூப் 4 உள்ளது என்று சொன்னால் கூட அது மிகையாக இருக்காது. இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. 7,301 பணியிடங்களுக்கு இந்த குரூப் 4 தேர்வு அறிவிக்கப்பட்டது. குறைந்தபட்ச கல்வித்தகுதி 10 ஆம் வகுப்பு என்றாலும் இந்த தேர்வுக்கு முதுகலை கட்டம் பெற்றவர்கள் வரை விண்ணப்பித்து இருந்ந்தனர்.

21 லட்சம் பேர்
இந்த தேர்வை எழுதை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்த்தனர். அதாவது டிஎன்பிஎஸ்.சி வரலாற்றில் குரூப் 4 தேர்வுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்தது இதுவே முதல் முறையாக இருந்தது. இதற்கு முன்பு கடந்த 2017 ஆம் ஆண்டில் 20.76 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்ததே இதற்கு முன்பாக அதிக எண்ணிக்கையாக இருந்ததது. தமிழகம் முழுவதும் 7,689 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.

முடிவுகள் எப்போது வெளியிடப்படும்
21 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தாலும் இந்த தேர்வை சுமார் 15 லட்சம் பேர்தான் எழுதியிருந்தனர். குரூப் 4 தேர்வு நடைபெற்று கிட்டதட்ட 6 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்று தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு எழுந்து உள்ளது. இந்த நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்த தகவலை டி.என்.பி.எஸ்.சி தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி 2023 ஆம் ஆண்டு
அதாவது, இந்த தேர்வு முடிவுகள் வரும் பிப்ரவரி 2023 ஆம் ஆண்டு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் எப்போது என்ற அப்டேட் வந்துள்ளதால் குரூப் 4 தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு மொத்த பணியிடங்கள் 9,870 ஆக உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தது. ஆனால், இன்று டி.என்.பி.எஸ்.சி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 7,302 என மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வர்கள் மத்தியில் சற்று ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications