சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செங்கல்பட்டு திமுக எம்எல்ஏ வரலட்சுமிக்கு சொந்தமான இடங்களில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை

Google Oneindia Tamil News

செங்கல்பட்டு: செங்கல்பட்டு திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனனின் வீடு மற்றும் அலுவலகங்களில் ஜிஎஸ்டி (மத்திய சரக்கு மற்றும் சேவை துறை) அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மத்திய சரக்கு மற்றும் சேவை துறையினர் கடந்த சில தினங்களாக சோதனை நடத்தி வருகின்றன. போலி நிறுவனங்களை நிறுவி அதன் மூலம் போலியான ரசீதுகளை வைத்து பெரும் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

GST raid in Chengelput MLA house

இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர், ஆப்பூரில் உள்ள செங்கல்பட்டு திமுக எம்எல்ஏ வரலட்சுமியின் வீடு, அலுவலகம் உள்பட 5 இடங்களில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரித் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

கடந்த 3 ஆண்டுகளாக எம்எல்ஏவாக உள்ள வரலட்சுமி வெளிநாட்டில் ஒரு நிறுவனத்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இங்கு வெளிமாநிலங்களைச் சேர்ந்தோர் பணி செய்து வருவதாகவும் அவர்களுக்கு முறையாக ஜிஎஸ்டி செலுத்தவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது தெரியவந்தது. அது போல் வரலட்சுமியின் சகோதரர் சந்தானத்தின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

English summary
GST officials searches in Chengelput MLA Varalakshmi's house, office including 5 more places.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X