வழிகாட்டி மதிப்பு உயருமா? 17 முதல் பத்திரப்பதிவு துறையின் ஆன்லைன் திட்டம்! அமைச்சரின் சூப்பர் நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வழிகாட்டி மதிப்பு உயருமா அல்லது குறைக்கப்படுமா என்ற குழப்பமும், சந்தேகமும் சமீப நாட்களாகவே எழுந்து வருகிறது. அத்துடன் பத்திரப்பதிவு நடைமுறைகளில் உள்ள சிரமங்களும் பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வந்தன. இப்படிப்பட்ட சூழலில், பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் சூப்பரான தகவல் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.

guideline-value-increase-online-registration-starts-aug-17-tvk-minister-shares-big-update

சொத்து அல்லது நிலம் வாங்குபவர்கள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான ஒன்று வழிகாட்டி மதிப்பு (Guideline Value) ஆகும். எளிமையாக சொன்னால், ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள நிலத்திற்கு அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச அதிகாரப்பூர்வ விற்பனை விலையே வழிகாட்டி மதிப்பு எனப்படுகிறது.

ரியல் எஸ்டேட்

ரியல் எஸ்டேட் சந்தையில் நிலவும் உண்மையான விற்பனை விலை இடத்திற்கு இடம் மாறுபட்டாலும், அரசு ஆவணங்களின்படி இந்த நிர்ணயிக்கப்பட்ட மதிப்பிற்கு குறைவாக பத்திரப்பதிவு செய்ய முடியாது. அந்த பகுதியின் வளர்ச்சி, உள்கட்டமைப்பு மற்றும் நிலத்தின் பயன்பாடு அதாவது குடியிருப்பு, வணிகம் அல்லது வி"வசாய நிலம் போன்றவற்றின் அடிப்படையில் தமிழக பதிவுத்துறை இந்த மதிப்பை அடிக்கடி மறுபரிசீலனை செய்து தீர்மானிக்கிறது.

சொத்து பரிவர்த்தனையின்போது செலுத்தப்படும் முத்திரைத்தாள் கட்டணம் எனப்படும் ஸ்டாம்ப் டியூட்டி மற்றும் பதிவுக் கட்டணத்தை கணக்கிட இந்த வழிகாட்டி மதிப்பே அடிப்படையாகும்.

வழிகாட்டி மதிப்பு உயர போகிறதா

மார்க்கெட் விலை எவ்வளவு அதிகமாக இருந்தாலும், அரசின் இந்த மதிப்பீட்டின்கீழ் குறைந்தபட்ச வரி செலுத்தப்பட வேண்டும். இது ரியல் எஸ்டேட் துறையில் முறையற்ற பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் சொத்து வாங்குவதில் ஏமாற்றமடையாமல் இருக்கவும், அரசுக்கு நியாயமான வரி வருவாய் கிடைக்கவும் பெரும் துணையாக அமைகிறது.

இந்நிலையில் வழிகாட்டி மதிப்பு உயர போகிறதா என்ற பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் வலுத்து வருகிறது.. இவைகளுக்கு பதிலளிக்கும் வகையில், "இப்போது வழிகாட்டி மதிப்பை உயர்த்தும் திட்டம் எதுவுமில்லை" என்று பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தெளிவாக அறிவித்துள்ளார்.

பத்திரப்பதிவு துறை அமைச்சர்

இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, "அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் மனை பிரிவுகளின் முதல் விற்பனை பதிவு ஆன்லைனில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இனி பொதுமக்கள் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வர வேண்டியதில்லை. வரும் 17-ஆம் தேதி முதல் இந்த முறை அமலுக்கு வருகிறது. முதலமைச்சர் இந்த சேவையைத் தொடங்கி வைக்கிறார்.

இடைத்தரகர்களின் தலையீட்டைக் குறைத்து, மக்களுக்கு எளிதாக ஆவண பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. படிப்படியாக பதிவுத்துறையின் அனைத்து சேவைகளும் ஆன்லைனில் கொண்டு வரப்படும். இது குறித்த சந்தேகங்களைப் போக்குவதற்கு 24 மணி நேரமும் இயங்கும் உதவி மையம் திறக்கப்படும்.

அரசு வழிகாட்டி மதிப்பு

அரசு வழிகாட்டி மதிப்பை உயர்த்தும் திட்டம் எதுவுமில்லை. வழிகாட்டி மதிப்பில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. அவற்றைச் சரி செய்வதற்காக, ஒரு கமிட்டி அமைத்து ஆய்வு செய்து வருகிறோம்." என்றார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பு சொத்து வாங்குவோருக்கு மிகுந்த நம்பிக்கையை தந்து வருகிறது.. படிப்படியாகப் பதிவுத் துறையின் அனைத்து சேவைகளும் இணையவழியில் மாற்றப்பட உள்ள நிலையில், பொதுமக்களுக்கு இதில் ஏற்படும் சந்தேகங்களைத் தீர்ப்பதற்காகவும், தொழில்நுட்பச் சிக்கல்களை உடனுக்குடன் சரி செய்வதற்காகவும் 24 மணி நேரமும் இயங்கும் சிறப்பு உதவி மையம் விரைவில் அமைக்கப்பட உள்ளது, கூடுதல் மகிழ்ச்சியை தந்து வருகிறது..

அரசின் இந்த நவீன நடவடிக்கைகள், பொதுமக்களுக்கு பத்திரப்பதிவுத் துறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+