பயிர்க்கடன்.. இப்ப கரும்பு நிலுவை தொகை வழங்க கடனுதவி.. விவசாயிகளுக்கு தமிழக அரசு தந்த ஹேப்பி நியூஸ்
சென்னை: கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்க கடனுதவி அளிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் உள்ளதாவது: "கரும்பு விவசாயிகளின் நலனில் சிறப்புக் கவனம் செலுத்தும் நோக்குடனும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை அதிகரிக்கும் பொருட்டும் 2022 ஆம் ஆண்டு முதல் சர்க்கரைத் துறை வேளாண்மை - உழவர் நலத்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சரால் தனிக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

சர்க்கரை தேவை: இந்தியாவில் சர்க்கரை உற்பத்தியில் தமிழ்நாடு 4ஆவது இடத்தில் உள்ளது. தொடர்ந்து சர்க்கரை உற்பத்தியில் தொடர்சரிவு என்ற நிலை மாறி 2022-23ஆம் ஆண்டு அரவைப் பருவத்தில் 14.74 இலட்சம் மெ.டன்கள் சர்க்கரை உற்பத்தி செய்து மாநிலத்தின் சர்க்கரைத் தேவையான 15 இலட்சம் மெட்ரிக் டன் என்பதைப் பூர்த்தி செய்யும் நிலைக்கு முன்னேறி உள்ளது.
தமிழ்நாட்டில் 2023-24 ஆம் ஆண்டு அரவைப் பருவத்தில் 12 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 16 தனியார் என மொத்தம் 30 சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றன. கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் 2023-24 அரவைப் பருவத்தில் 15.06.2024 வரை 30.82 இலட்சம் மெ.டன் கரும்பை அரவை செய்து, 8.92 சதவிகித சர்க்கரை கட்டுமானத்தில் 2.75 இலட்சம் மெ.டன் சர்க்கரையை உற்பத்தி செய்துள்ளது.
கரும்பு உற்பத்தி: உற்பத்தி செய்யப்படும் சர்க்கரையை விற்பனை செய்து கரும்பு பணம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சர்க்கரை விற்பனை மூலம் கரும்பு பணம் முழுமையாக வழங்க இயலாத சூழ்நிலையில் ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் வழிவகைக் கடன் அனுமதிக்கப்பட்டு கரும்பு பணம் நிலுவையின்றி வழங்கி முடிக்கப்படுகிறது.
கடந்த 2020-21 அரவைப் பருவம் முதல் 2022-23 அரவைப் பருவம் வரை கரும்பு நிலுவை தொகை வழங்கவும், ஆலைகளின் நடைமுறை மூலதனத்திற்காகவும் தமிழ்நாடு அரசு ரூ.600.37 கோடி வழிவகைக் கடனாக அனுமதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு கரும்பு பணம் நிலுவையின்றி வழங்கப்பட்டுள்ளது.
அரவை பருவம்: கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளால் நடப்பு 2023-24 அரவைப் பருவத்திற்கு வழங்க வேண்டிய ரூ.920.99 கோடியில் 15.06.2024 வரை ரூ.835.73 கோடி வழங்கப்பட்டு நிலுவையாக ரூ.85.26 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டியுள்ளது.
கரும்பு விவசாயிகளின் நலன் பாதுகாக்கும் வகையில் கரும்பு பணம் விவசாயிகளுக்கு நிலுவையின்றி வழங்கிடவும் ஆலைகளின் நடைமுறை மூலதன செலவிற்காவும் ரூ.94.49 கோடி வழிவகைக் கடன் அனுமதித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications