பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.. தமிழக தேர்வுத்துறை நீட்டித்த காலக்கெடு.. மகிழ்ச்சி செய்தி
சென்னை: 10ம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை தேர்வுத்துறை இணையதளத்தில் 19-ந் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கால அவகாசம் தரப்பட்டுள்ளது.. இது தொடர்பான அறிவிப்பினை அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.. இந்த கால அவகாசமானது பொதுத் தேர்வு மாணவர்களுக்கு பெருத்த நிம்மதியை தந்து வருகிறது.
வழக்கமாக, பொதுத் தேர்வு எழுத போகும் மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்பட்டதுமே, அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் எமிஸ் தளத்தில் மாணவர்களின் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப் படுவார்கள்.

மாணவர்கள் பெயர் திருத்தம்
அது மட்டுமல்ல, மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பெற்றோர் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரி பார்க்க வேண்டும். அதில் திருத்தங்கள் இருந்தால் குறிப்பிட்ட நாட்களுக்குள் அவைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாணவரின் பெயர், பிறப்புச் சான்றிதழில் உள்ளவாறே இருக்க வேண்டும் என்றும் மாணவர்கள் அறிவுறுத்தப்படுவார்கள்..
அரசிதழில் பெயர் மாற்றம் செய்தவர்களுக்கு மட்டுமே அதன் நகலை பெற்று அதன் அடிப்படையில் பெயர் மாற்றம் செய்துகொள்ளலாம்..
ஆவணங்கள், அரசு பள்ளி மாணவர்கள்
அதேபோல சமீபத்தில் எடுக்கப்பட்ட மாணவருடைய பாஸ்போர்ட் அளவு போட்டோவை படத்தை மட்டுமே அப் லோடு செய்யவேண்டும். இதுதவிர, தேர்வு முடிவுகள் மாணவர்களின் பெற்றோர் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அதனால் பதிவேற்றம் செய்யப்படும் செல்போன் எண் சரியாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
தேர்வில் சலுகை பெற விரும்பும் மாற்றுத் திறனாளி தேர்வர்கள் அதற்குரிய ஆவணங்களுடன் இணைத்து பதிவேற்றம் செய்ய வேண்டும். மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய பிறகு திருத்தங்கள் கோரி தேர்வுத்துறைக்கு அனுப்பக்கூடாது என்பது போன்ற விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன.
கால அவகாசம் நீட்டிப்பு
இந்த நிலையில், தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் தான் தற்போது வெளியாகி உள்ளது.
நடப்பு கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப்பட்டியல் விரைவில் தயாரிக்கப்பட இருக்கிறது.
இதையடுத்து எமிஸ் தளத்தில் மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, பாலினம், புகைப்படம், கைப்பேசி எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா? என்பதை சரிபார்த்து திருத்தம் இருப்பின் அவற்றை மேற்கொள்ளலாம் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வரும் அரசு தேர்வுத்துறை தெரிவித்திருந்தது.
இணையதளம் பதிவேற்றம்
அதன்படி, மாணவர்களின் விவரங்களை தேர்வுத்துறை இணையதளத்தில் நவம்பர் 19ந்தேதிக்குள் அதாவது நேற்று முன்தினத்திற்குள் பதிவேற்றம் செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இந்த கால அவகாசத்தை வருகிற 27-ந்தேதி வரை நீட்டித்து தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், 'பெயர் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ள இதுவே இறுதியான வாய்ப்பாகும். இதை தலைமையாசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இந்த பெயர்ப்பட்டியலின் அடிப்படையிலேயே மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்படும் என்பதால் பணிகளை மிகவும் கவனமாக மேற்கொள்ளவேண்டும்.
ஏதேனும் தவறுகள் நிகழ்ந்தால் சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர் மற்றும் பள்ளித்தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க நேரிடும்' என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசமானது பொதுத் தேர்வு மாணவர்களுக்கு பெருத்த நிம்மதியை தந்து வருகிறது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications