சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆற்காடு இளவரசர் பட்டத்தை ரத்து செய்ய முடியாது.. ஹைகோர்ட் மறுப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: ஆற்காடு இளவரசர் என்ற பட்டத்தையும், அவருக்கு வழங்கப்படும் சலுகைகளையும் திரும்பப் பெறக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், ஆற்காடு நவாப்புக்கு ஆற்காடு இளவரசர் என பட்டமும், பல்வேறு சலுகைகளும் இங்கிலாந்து அரசால் வழங்கப்பட்டது.

hc dismisses case seeking to quash the title of arcot prince

1947 ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்து, ஜனநாயக குடியரசாக இந்தியா மாறியுள்ள நிலையில், ஆற்காடு இளவரசர் என்ற பட்டத்தையும், அவருக்கான சலுகைகளையும் திரும்ப பெறக் கோரி சென்னை பெரம்பூரைச் சேர்ந்த குமாரவேலு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை ஆற்காடு இளவரசர் வசிக்கும் அமீர் மஹாலுக்கு 2 கோடியே 74 லட்சம் ரூபாய் மத்திய பொதுப்பணித் துறை செலவிட்டுள்ளதாக குறிப்பட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி திடீர் ராஜினாமா!சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி திடீர் ராஜினாமா!

இந்த மனு நீதிபதி சத்திய நாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஆங்கிலேயர்கள் ஆட்சியில் வழங்கப்பட்ட இளவரசர் பட்டம், அவரது பரம்பரைக்கும் தொடரும் எனவும், சுதந்திரத்துக்குப் பிறகு ஆற்காடு இளவரசர் வசித்து வரும் அமீர் மஹால் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ளதால் அதை மத்திய அரசு பராமரிப்பதாக மத்திய அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஆற்காடு இளவரசர் பட்டத்தை மத்திய அரசே அங்கீகரித்துள்ள நிலையில், ஆற்காடு இளவரசர் பட்டத்தை வழங்கியும், அரசியல் ஓய்வூதியம் வழங்கியும் பிறப்பித்த நிர்வாக உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

English summary
Madras HC has dismissed a petition seeking to quash the title of Arcot Prince.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X