நெல்லை, குமரியில் கனமழை...6 மணி நேரத்தில் புயல் உருவாகும் - 90 கிமீ வேகத்தில் காற்று வீசுமாம்
தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா-தெற்கு ஓடிசா கடலோர பகுதியை நாளை காலை நெருங்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் தென் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று நெல்லை, குமரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக மழை சற்றே ஓய்ந்துள்ளது என்றாலும் தென்காசி மாவட்டத்தில் 8 செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் 7 செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. கன்னியாகுமரி,சிவகிரியில் 6 செமீ மழையும் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் இன்றைய தினம் வெப்பசலனம் காரணமாக தென் மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

குமரி, நெல்லையில் கனமழை
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டின் தென் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை கன்னியாகுமரி,திருநெல்வேலி ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏனைய தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பொழியும்.

மிதமான மாழை
டிசம்பர் 5ம் தேதி சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வறண்ட வானிலை
டிசம்பர் 6ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையோர உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தமிழ்நாட்டின் இதர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நீடிக்கும் எனவும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 6, 7ல் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகாலையில் பனி மூட்டம் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

மேக மூட்டம்
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவிற்கு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓடிசாவை நெருங்கும் புயல்
அதே சமயம் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா-தெற்கு ஓடிசா கடலோர பகுதியை நாளை காலை நெருங்கக் கூடும் என்றும் தொடர்ந்து வடக்கு-வடகிழக்கு திசையில் ஓடிசா கடற்கரையை ஒட்டி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் காற்று வீசும்
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி, வடக்கு ஆந்திரா மற்றும் ஒரிசா கடலோர பகுதிகளில் புயல் காற்று மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

1ஆம் எண் புயல் எச்சரிக்கை
இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள எண்ணூர், கடலூர், நாகை, தூத்துக்குடி, பாம்பன், புதுச்சேரி உள்ளிட்ட துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications