தமிழகத்தில் மிக கனமழை... 5 நாட்களுக்கு கவனம் மக்களே - வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் வரும் 30 ஆம் தேதிவரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் வரும் 29ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. நெல்லை, குமரி, தூத்துக்குடி, மதுரை, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, கோவை, திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை முடிந்து வடகிழக்குப் பருவமழை திங்கட்கிழமை தொடங்கியது. பரவலாக பல மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் விடிய விடிய மழை கொட்டியது. அதிகபட்சமாக ஸ்ரீவைகுண்டம், சத்தியமங்கலத்தில் 11 செமீ மழை பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் இன்று முதல் 30ஆம் தேதி வரைக்கும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்று முதல் 30ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் 29ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 29ம் தேதியில் கடலோர மாவட்டங்கள், புதுக்கோட்டை, காரைக்காலில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டின் இதர மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
அக்டோபர் 30ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டின் இதர மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தலைநகர் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
நாளைய தினம் தமிழகத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. வங்கக்கடலில் மத்திய பகுதியில் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும். அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Recommended Video
அக்டோபர் 27 மற்றும் 28ம் தேதியில் வங்கக்கடலில் தென்மேற்கு பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளது. அக்டோபர் 29, 30 மற்றும் 31 ஆம் தேதியில் மன்னார் வளைகுடா, தமிழகக் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். அக்டோபர் 30 மற்றும் 31 ஆம் தேதியில் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி வீச வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பிரான்சில் மட்டும் 7 பேர் பலி.. 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஐரோப்பாவை வாட்டும் அதீத வெயில்! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications