இதயநோயால் உயிருக்கு போராடும் 2.8 வயது குழந்தை யுவதாரணியை காப்பாற்ற உதவுங்கள்
சென்னை: புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 2 வயது 8 மாத குழந்தையான யுவதாரணி கடுமையான இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்படவில்லையெனில் குழந்தையின் உயிரை காப்பாற்றுவது கஷ்டம். எனவே யுவதாரணியின் உயிரை காப்பாற்ற முடிந்த உதவியை இன்றே செய்யுங்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமானது. அவருக்கு சமீபத்தில் பெண்குழந்தை பிறந்தது. கேட்ரிங் வேலையில் தினக்கூலியாக உள்ள வேல்முருகனுக்கு மாதத்தில் எல்லா நாளும் போதுமான வருமானம் கிடைத்துவிடாது. வேலை கிடைக்கும் நாட்களில் ஒரு நாளைக்கு ரூ.400 என சம்பளம் கிடைக்கும். வேலையில் எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் குழந்தை யுவதாரணியின் புன்சிரிப்பில் எல்லா கஷ்டங்களும் மறந்துவிடும். ஆனால் சில நாட்களாக குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைந்திருக்கிறது.

இரண்டரை வயதில் குழந்தைகள் எந்த அளவுக்கு ஆக்டிவாக இருப்பார்களோ, அந்த அளவுக்கு யுவதாரணி இல்லை. எனவே, ஒட்டுமொத்த குடும்பமே சோகத்தில் ஆழ்ந்தது. பார்க்காத வைத்தியம் கிடையாது, கும்பிடாத சாமி கிடையாது. ஆனாலும் குழந்தை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இந்த நிலையில்தான் தந்தை வேல்முருகன், மியாட் மருத்தவமனையில் குழந்தை யுவதாரணியை பரிசோதித்தார். இதில், குழந்தைக்கு இதய நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

மருத்துவர்கள் இதனை Pulmonary atresia என்று கூறுகிறார்கள். உடனடியாக அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும். அறுவை சிகிச்சை மற்றும் மருந்து என எல்லாவற்றிற்கும் சேர்த்து ரூ.3.25 லட்சம் செலவாகும். சாதாரண கூலி தொழிலாளியால் இவ்வளவு பெரிய தொகையை உடனே ஏற்பாடு செய்ய முடியாது. எனவே, குழந்தை யுவதாரணியை காப்பாற்ற உடனே உதவுங்கள். உங்களால் முடிந்த சிறு உதவி கூட பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications