மெரீனாவை திறக்க அரசு உத்தரவிடாவிட்டால் நாங்கள் உத்தரவிடுவோம் - ஹைகோர்ட் நீதிபதிகள் அதிரடி
மெரினாகடற்கரையை திறக்க அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக மாநகராட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: மெரினா கடற்கரை திறப்பது தொடர்பாக அரசு முடிவெடுக்காவிட்டால் வரும் 30 ம்தேதி நீதிமன்றம் முடிவெடுக்கும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். வழக்கு விசாரணை டிசம்பர் 3 ம்தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரையில் மீன் அங்காடிகளை முறைப்படுத்துவது தொடர்பாகவும், கடற்கரையை தூய்மைப்படுத்துவது தொடர்பாகவும் தொடரப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் ரமேஷ் அடங்கிய அமர்வில் நிலுவையில் உள்ளது.

வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், மெரினாவை சுத்தப்படுத்துவதற்கு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், லூப் சாலையில், ஆக்கிரமிப்புகள் முளைக்காமல் கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மெரினா கடற்கரையில் தள்ளுவண்டிகளுக்கான டெண்டரை திறக்க தனி நீதிபதி தடை விதித்துள்ளதால், அந்த டெண்டரை திறக்க இயலவில்லை எனவும் தெரிவித்தார். பின்னர், ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மெரினா கடற்கரையை பொதுமக்களுக்கு எப்போது திறக்கப்படும் என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு, நவம்பர் இறுதி வரை மெரினாவை திறக்க வாய்ப்பில்லை என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பதிலளித்தார். இதையடுத்து, ஊரடங்கு தளர்த்தப்பட்டு, திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மெரினா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பதில் தாமதம் ஏன் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த விஷயத்தில் அரசு முடிவெடுக்காவிட்டால், நீதிமன்றம் உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்தனர்.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி ஊரடங்கு நிபந்தனைகள் நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது ஆகும் அதேவேளையில் மெரினா கடற்கரையை திறப்பது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப் பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
மெரினா கடற்கரை திறப்பது அரசின் கொள்கை முடிவு என்றும் அவர் குறிப்பிட்டார். இதையடுத்து நீதிபதிகள் வரும் 30 ம்தேதி அரசு முடிவெடுக்காவிட்டால் நீதிமன்றம் முடிவெடுக்கும் என்று தெரிவித்துள்ளனர். வழக்கு விசாரணை ஒத்திவைத்து கடற்கரையில் தள்ளுவண்டிகளுக்கான டெண்டர் நடவடிக்கைகளை தொடரலாம் என உத்தரவிட்டுள்ளனர்.வழக்கு விசாரணை டிசம்பர் 3 ம்தேதி வரை வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
போலீஸே உடலை அடக்கம் பண்ணிடும்! ஆகாஷ் வழக்கில் நீதிமன்றம் எச்சரிக்கை! விடாப்பிடியாய் பெற்றோர்! பரபர -
100 நாள் ஆச்சு.. இன்று மாலைக்குள் ஆகாஷ் உடலை வாங்குங்க.. பெற்றோருக்கு கெடு விதித்த ஐகோர்ட்! -
Marina Rope Car: சென்னை மக்களின் கனவாச்சே.. மெரினா ரோப் கார் திட்டத்தை கைவிட முடிவா? போச்சு! -
விவாகரத்து வழக்குகளில் பெயர்களை வெளியிடக் கூடாது - உயர்நீதிமன்ற கிளை போட்ட உத்தரவு! - -
3 மாதங்களாக மார்ச்சுவரியில் ஆகாஷ் உடல்..நீதிமன்ற உத்தரவால் 102வது நாளில் தகனம்! உறவினர்கள் அஞ்சலி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications