ஜன. 3 முதல் நேரடி விசாரணை மட்டுமே...ஆன்லைன் விசாரணை நிறுத்தம் - ஹைகோர்ட் பதிவாளர் அறிவிப்பு
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் ஆன்லைன் மூலம் வழக்குகள் நடைபெறும் முறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை: உயர்நீதிமன்றத்தில் வரும் ஜனவரி 3 ஆம் தேதி முதல் நேரடி விசாரணை மட்டுமே நடைபெறும் எனவும் ஆன்லைன் மூலம் வழக்குகள் நடைபெறும் முறை நிறுத்தி வைக்கப்படும் எனவும் பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஜனவரி 3 ஆம் தேதி முதல் நேரடி விசாரணை மட்டுமே நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் மறு உத்தரவு வரும் வரை நேரடி விசாரணை தொடரும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற கிளை ஆகியவற்றில் காணொலிக்காட்சி முறையிலான விசாரணை நிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று ஆரம்பித்த போது நீதிமன்ற வழக்கு விசாரணை முழுக்க ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டது. தொற்றின் விகிதம் குறையத் தொடங்கியதும் நேரடி மற்றும் காணொளி காட்சி விசாரணை என இரண்டு விசாரணை முறையும் தற்போது அமலில் இருந்து வந்தது.
இந்நிலையில், ஜனவரி 3 ஆம் தேதி முதல் நேரடி விசாரணை மட்டுமே நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் மறு உத்தரவு வரும் வரை நேரடி விசாரணை தொடரும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற கிளை ஆகியவற்றில் காணொலிக்காட்சி முறையிலான விசாரணை நிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற காணொலி விசாரணையில் நீதிபதி தீர்ப்பு வாசித்துக்கொண்டிருந்தார். அப்போது கேமரா ஆனில் இருப்பது தெரியாமல் வழக்கறிஞர் ஒருவர் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், காணொளி காட்சி விசாரணையின் போது பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட வழக்கறிஞரை தொழில் செய்ய தடை விதிக்குமாறு பார் கவுன்சிலுக்கு பரிந்துரைத்துள்ளதோடு, சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுகுறித்த காட்சிகளை சிலர் பதிவு செய்ததால் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இந்த நிலையில், 2022 ஜனவரி 3 ஆம் தேதி முதல், சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் ஆன்லைன் விசாரணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக நீதித்துறை நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 3 முதல் நேரிடையாக வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications