சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜெய்பீம் திரைப்பட வழக்கு.. நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேலுக்கு ஆறுதல்! வழக்கை ரத்து செய்த ஐகோர்ட்

Google Oneindia Tamil News

சென்னை: ஜெய்பீம் படம் தொடர்பாக நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.

பழங்குடி சமுதாயத்தை சேர்ந்த ராஜாகண்ணு போலீசாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கை வாதாடி வெற்றிகண்ட ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துருவின் கதையையே இயக்குநர் ஞானவேல் இதில் படமாக்கி இருப்பார்.

சென்னையில் நடந்த 'ஜெய்பீம்’! கைவிலங்கோடு பூட்ஸ் காலால் உதைத்த போலீஸ்! சாட்டையை எடுத்த நீதிமன்றம்..! சென்னையில் நடந்த 'ஜெய்பீம்’! கைவிலங்கோடு பூட்ஸ் காலால் உதைத்த போலீஸ்! சாட்டையை எடுத்த நீதிமன்றம்..!

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

இந்த திரைப்படம் வன்னியர் சமூக மக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும் அவர்களை இழிவுபடுத்தியும் பிறமக்களின் மனதில் வெறுப்பை உருவாக்கும் வகையிலும் இருந்ததாகவும், அவர்கள் வழிபடும் அக்னி குண்டம்,

நீதிமன்றத்தில் மனு

நீதிமன்றத்தில் மனு

பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் அமைப்புகள் ஜெய்பீ திரைப்படத்துக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில், தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.

வழக்குப்பதிவு

வழக்குப்பதிவு

மனுவை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் வேளச்சேரி போலீசார், நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை விதிக்கவும் கோரி ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

படக்குழு விளக்கம்

படக்குழு விளக்கம்

அந்த மனுவில், இந்த புகாரை தாக்கல் செய்யும் முன்பே படத்தில் காலண்டர் இடம்பெற்றுள்ள சர்ச்சை காட்சி நீக்கப்பட்டுள்ளதாகவும், வன்னியர் சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளதாக கூறுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வழக்கு ரத்து

வழக்கு ரத்து

இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில், வழக்கை ரத்து செய்ய ஆட்சேபனை தெரிவித்து இடையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும், அந்த இடையீட்டு மனுவையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது. இதை வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம், சூர்யா, ஞானவேல் மீதும் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

English summary
Highcourt cancelled Case against Actor Suriya and Director Gnanavel for Jaibhim: ஜெய்பீம் படம் தொடர்பாக நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X