Kitkat கவரில் இந்து கடவுள் படங்கள்.. வெடித்த சர்ச்சை.. சாக்லேட்களை திரும்ப பெற்றது நெஸ்லே நிறுவனம்!
சென்னை: கிட்கட் சாக்லேட்டின் கவர்களில் சாமி படங்கள் இருந்தது சர்ச்சையானதைத் தொடர்ந்து, அந்த சாக்லேட்களைத் திரும்பப் பெற்றிருக்கிறது நிறுவனம்.
இந்தியாவில் பிரபலமான சாக்லேட் நிறுவனம் நெஸ்லே இந்தியா. மில்கிபார், மன்ச், கிட்கேட், மில்கிபார், மில்க்மெய்ட் உள்ளிட்ட பிரபலமான சாக்லேட் பொருட்களை தயாரித்து வழங்கி வருகிறது.
இந்தியாவில் அதிக அளவில் நெஸ்லே இந்தியாவின் உணவுப் பொருட்கள் விற்பனையாகி வருகிறது.

நெஸ்லே
இந்த நிலையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட நெஸ்லே இந்தியாவின் கிட்கேட் சாக்லேட் கவரில், இந்து கடவுள்களின் படங்கள் இருந்தது. இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. சமூக வலைதளங்களில் பலர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வந்தனர். இந்த நிலையில், நெஸ்லே இந்தியா, ஏற்கனவேஅந்த சாக்லேட்டுகளைத் திரும்பப் பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளது.

கிட்கட்
கிட்கட் ரேப்பர்களில் ஜகந்நாதர், பாலபத்ரா மற்றும் மாதா சுபத்ராவின் உருவங்கள் இடம் பெற்றிருந்தது. புனிதப் படங்களைப் பயன்படுத்துவதன் மூலம் நிறுவனம் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, நெஸ்லே நிறுவனம் வருத்தம் தெரிவித்ததோடு, ஒரு முன்கூட்டிய நடவடிக்கையாக, கடந்த ஆண்டே சந்தையில் இருந்து அந்த பேக்குகளை திரும்பப் பெற்றதாகக் கூறியது.

மத உணர்வுகள்
மக்களின் உணர்வுகளை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அவர்களுக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். உங்களுடைய மத உணர்வுகளை புண்படுத்தியிருந்தால், அதற்காக வருத்தப்படுகிறோம்'' என்று கிட்டேட் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு சந்தையில் இருந்து இந்த சாட்லேட் பேக்குகளை நாங்கள் திரும்பப் பெற்றுள்ளோம். உங்கள் புரிதலுக்கும் ஆதரவுக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம்," என்று நெஸ்லே செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

பட்டசித்ரா
உள்ளூர் கலாசாரத்தைப் பிரதிபலிக்கவும், அதை கொண்டாடும் விதமாகவும் சாக்லேட் கவர்களில் படங்கள் வைக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் தான், ஒடிசாவின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக் 'பட்டச்சித்ரா'வை குறிக்கும் வடிவமைப்புகளுடன் கிட்கேட் கொண்டாட விரும்பியதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. கூறியது.

சிவப்பு பாண்டா
இதேபோல், கடந்த ஆண்டு ஏப்ரலில், நெஸ்லே இந்தியா தனது கிட்கேட் சாக்லேட்டின் பேக்கேஜிங்கில் மணிப்பூரின் கெய்புல் லாம்ஜாவோ தேசிய பூங்காவை மேகாலயாவில் உள்ளதாக தவறாக சித்தரித்ததற்காக மன்னிப்பு கேட்டது. இதையடுத்து மாநில அரசாங்கத்தின் அதிகாரிகளின் ஆட்சேபனையைத் தெரிவித்தனர்.பிறகு அந்த கவர் உடனடியாக நீக்கப்பட்டது. மேலும், கிட்கேட் சாக்லேட்டின் சிவப்பு பாண்டா இனத்தின் படமும் இடமும் இடம்பெற்றிருந்தது.












Click it and Unblock the Notifications