புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா.. சென்னை புறநகர் பகுதி மக்களுக்கு செம சர்ப்ரைஸ்! ஸ்டாலின் அமைத்த குழு
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் வாழ்ந்தும் சட்டபூர்வமான உரிமைகள் இல்லாமல் இருப்பதால் அடிப்படை வசதிகள் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.. குறிப்பாக வீடு, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட தேவைகளுக்கு பட்டா இல்லாத நிலை தடையாக இருப்பதாகவும் கூறி, சென்னையில் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தி உள்ளனர்.
ஏழை, எளிய மக்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் புறம்போக்கு மற்றும் அரசு நிலங்களை ஆக்கிரமித்து தலைமுறை, தலைமுறையாக பல லட்சம் பேர், நீண்ட காலமாக வசித்து வருகின்றனர்..

இவர்களுக்கு பட்டா கிடைக்காமல் அவதியில் உள்ளனர். எனவே நீண்ட காலமாக குடியிருப்போர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை மனு கொடுத்து போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர்..
சென்னை புறநகர் பகுதி
குறிப்பாக, சென்னையை சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் "பெல்ட் ஏரியா" எனப்படும் 32 கிமீ பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து, பல வருடமாக குடியிருப்பவர்கள் பட்டா பெற முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள்.
மதுரை, நெல்லை போன்ற மாநகராட்சிகளிலும் இதே பிரச்சனை நிலவுகிறது. எனவேதான், 86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க அமைச்சரவையில் ஒப்புதலும் வழங்கப்பட்டது.
இலவச வீட்டு மனை
இதையடுத்து, தமிழகத்தில் இலவச வீட்டு மனை வழங்கும் திட்டத்தில், ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு, வீட்டு மனை பட்டாவை அரசு வழங்கி வருகிறது. அதேபோல சென்னை புறநகர் பகுதிகள், அருகில் உள்ள மாவட்டங்களில், மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்துள்ளோருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
சென்னை, சென்னை புறநகர் மட்டுமல்லாமல், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில், மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கும் பட்டா வழங்க முடிவு செய்தது.. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால், அதற்குள் பட்டா வழங்கும் பணிகளை முடிப்பதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது..

புறம்போக்கு நிலங்கள்
இந்நிலையில், சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் நீண்ட காலமாக குடியிருக்கும் மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா விரைந்து வழங்க வேண்டும் என்றும், அரசு புறம்போக்கு நிலங்கள், அரசு கொடுத்த மாற்று இடத்தில் வீடு கட்டி குடியிருப்பவர்கள் மற்றும் பயன்பாடற்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும் என்றும் கோரி சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலிருந்து வந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கொட்டும் மழையிலும் பங்கேற்றனர்.
சிவானந்தா சாலையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டபோது, அரசு புறம்போக்கு நிலங்கள், அரசு வழங்கிய மாற்று இடங்களில் வீடு கட்டி குடியிருப்போர் உள்ளிட்டோருக்கு பட்டா வழங்க வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது.
குடிநீர், மின்சாரம்
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் வாழ்ந்தும் சட்டபூர்வமான உரிமைகள் இல்லாமல் இருப்பதால் அடிப்படை வசதிகள் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படுவதாக தெரிவித்தனர். முக்கியமாக வீடு, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட தேவைகளுக்கு பட்டா இல்லாத நிலை தடையாக இருப்பதாக வேதனை தெரிவித்தனர்.
ஸ்டாலின் தந்த நம்பிக்கை
ஆர்ப்பாட்டம் முடிவடைந்த பிறகு, சென்னை அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை, சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் சந்தித்தனர். பட்டா கோரி பொதுமக்கள் அளித்த மனுக்களை அவர்கள் முதல்வரிடம் வழங்கி, இந்த கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.
அப்போது மனுக்களை பெற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின், ஆட்சேபனைக்குரிய அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு நிலம் வகை மாற்றம் செய்து பட்டா வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதற்காக தலைமை செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என்றும் உறுதி தந்துள்ளார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications