சொந்தக் கட்சிக்கும் நோ 'சலுகை'... ஆதவ் பேச்சும் நீக்கம்.. அடித்து ஆடும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் பேரவைத் தலைவர் பதவி என்பது எப்போதுமே அரசியல் விமர்சனங்களுக்கும் விவாதங்களுக்கும் உட்பட்ட ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. ஆளுங்கட்சியின் பிரதிநிதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் சபாநாயகர், எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்குகிறார் என்ற குற்றச்சாட்டு எழுவது நமது ஜனநாயக அமைப்பில் வழக்கமான ஒன்றுதான்.

ஆனால், தற்போதைய 17வது சட்டமன்றத்தில் அந்த பிம்பத்தை முற்றிலும் உடைத்து எறிந்து, அவையின் அனைத்துத் தரப்பு உறுப்பினர்களின் நம்பிக்கையையும் பெற்ற உள்ளார் சட்டசபை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் .

vijay tvk

ஜே.சி.டி.பிரபாகர் - அமைதியான அணுகுமுறை

சட்டமன்றத்தில் காரசாரமான விவாதங்கள், கூச்சல் குழப்பங்கள் மற்றும் அமளிகள் ஏற்படுவது இயற்கை. அத்தகைய இக்கட்டான சூழல்களில் உணர்ச்சிவசப்படாமல், அவையின் கண்ணியத்தை உயர்த்தப் பிடிக்கும் அவரது அமைதியான அணுகுமுறை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பேரவையைத் தனது முதிர்ச்சியாலும், ஜனநாயகப் பண்பினாலும் வழிநடத்திச் செல்லும் அவரது பாணி, இன்றைக்கு அனைத்துக் கட்சியினராலும் பாராட்டைப் பெற்று வருகிறது.

சொந்தக் கட்சி என்ற சலுகை கிடையாது!

பொதுவாக சபாநாயகர் நாற்காலியில் அமருபவர், தான் சார்ந்த ஆளுங்கட்சிக்குச் சாதகமாகச் செயல்படுகிறார் என்ற எண்ணம் பொதுவெளியில் இருக்கும். ஆனால், ஜே.சி.டி.பிரபாகர் அந்த எல்லையைத் தாண்டி நடுநிலைமையாக செயல்பட்டு வருகிறார். சட்டமன்ற விதிகள் மற்றும் மரபுகளை மீறிப் பேசும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் ஆளுங்கட்சியா அல்லது எதிர்க்கட்சியா என்ற பாகுபாடின்றி உடனடியாகத் தடுத்து நிறுத்துகிறார்.

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற மரபுகளுக்கு மாறான, அன்-பார்லிமென்டரி வார்த்தைகளைப் பேசுவோருக்கு இவர் கொடுக்கும் எச்சரிக்கையும் நடவடிக்கையும் மிகக் கடுமையானவை. சொந்தக் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் மூத்த தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தவறு செய்தாலும் அவர் விட்டுக்கொடுப்பதில்லை.

அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட பேச்சுக்கள்:

இதற்கு மிகச்சிறந்த உதாரணம், தவெக முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில் பேசியபோது நடந்த நிகழ்வாகும். அவையின் விதிகளுக்கு மாறாகப் பேசப்பட்ட சில கருத்துக்களை உடனடியாகத் தடுத்து நிறுத்திய சபாநாயகர், அந்த வார்த்தைகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிட்டார். ஒன்றுக்கும் மேற்பட்ட முறை ஆதவ் அர்ஜுனாவின் பேச்சில் இருந்த வரிகளை அவர் நீக்கியுள்ளார்.

அதுமட்டுமன்றி, தவெகச் சேர்ந்த மேலும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிய அன்-பார்லிமென்டரி வார்த்தைகளையும் தாமதமின்றி அவைக் குறிப்பில் இருந்து நீக்கி, சட்டமன்றத்தின் கண்ணியமே முதன்மையானது என்பதைத் திட்டவட்டமாக உணர்த்தியுள்ளார்.

அனைத்துக் கட்சிகளின் நம்பிக்கையைப் பெற்ற பேரவைத்தலைவர்

ஆளுங்கட்சித் தலைவர்களின் தவறான கருத்துக்களையே தயவுதாட்சணியமின்றி அவைக் குறிப்பில் இருந்து நீக்கும் சபாநாயகரின் இந்த நடவடிக்கை, எதிர்க்கட்சிகளிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தனது சொந்தக் கட்சித் தலைவர்களுக்கே சலுகை காட்டாத ஒரு சபாநாயகர், நிச்சயம் அவையை நடுநிலையோடுதான் நடத்துவார் என்ற எண்ணம் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையேயும் ஆழமாகப் பதிந்துள்ளது.

கூச்சல் குழப்பம் வேண்டாம்

எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யப் போதிய நேரம் வழங்குவது, கூச்சல் குழப்பம் நிலவும்போது சட்டப் புத்தகத்தின் விதிகளைச் சுட்டிக்காட்டி உறுப்பினர்களை அமைதிப்படுத்துவது, கடுமையான சூழல்களிலும் முகத்தில் புன்னகையோடு அவையைக்ட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது என இவரது செயல்பாடுகள் சட்டமன்ற வரலாற்றுக்கு ஒரு புதிய வழிகாட்டியாக அமைந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+