டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு நடந்தது எப்படி? முதல் தகவல் அறிக்கையில் பரபரப்பு தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு நடந்தது எப்படி என்பது குறித்து லஞ்சஒழிப்பு துறை தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. மதுபான ஆலைகளில் மதுபானங்கள் கொள்முதல் செய்வது, பார்கள் நடத்துவது, வாகன போக்குவரத்து, பழைய பாட்டில்களை வாங்குவது, டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளை பணிநியமனம் செய்வது போன்றவற்றில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

டாஸ்மாக்கில் பலகோடி ரூபாய் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் 45 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஐ.ஏ.எஸ். அதிகாரி விசாகன் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் பல்வேறு விவரங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றினை பார்ப்போம்.

How did the irregularities at TASMAC occur Sensational details revealed in the FIR

ஒட்டுமொத்தமாக ஏழு பேர் சேர்ந்த டாஸ்மாக்கில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக எப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மதுபான ஆலைகளில் மதுபானங்கள் கொள்முதல் செய்வது, பார்கள் நடத்துவது, வாகன போக்குவரத்து, பழைய பாட்டில்களை வாங்குவது, டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளை பணிநியமனம் செய்வது உள்ளிட்டவற்றில் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளதாகவும், இந்த முறைகேடுகள் கடந்த 2021 முதல் 2025-ம் ஆண்டு வரை நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக்கில் விதிமுறைகளை சிறிதும் பின்பற்றாமல், கண்டபடி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்களாம். இதைதவிர, 'பார்ட்டி பண்ட்' (கட்சி நிதி) என்ற பெயரில் கட்சி நிதியும் முறைகேடாக வசூலிக்கப்பட்டுள்ளதாம். மதுப்பிரியர்களிடம் இருந்தும், ஒரு பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரை சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

வெளிநாட்டு மதுபாட்டில்களுக்கு ரூ.500 வரை வசூலித்துள்ளார்கள் என்றும் 'கரூர் கேங்' என்ற பெயரில் செயல்பட்டவர்கள் இந்த கட்டண வசூலில் ஈடுபட்டுள்ளார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரத்தேஷ்ராஜ் சண்முகவேலும், மூலனூர் கார்த்திக்கும் டாஸ்மாக்கில் நடந்த முறைகேடுகளுக்கு மூல காரணமாக செயல்பட்டுள்ளார்கள் என்றும் அவர்கள் சொல்படி விசாகனும், மண்டல மேலாளர்கள் ராமதுரை முருகனும், பன்னீர் செல்வமும் மற்றும் மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகளும் செயல்பட்டுள்ளார்கள் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அதேபோல் பார்கள் டெண்டர் விட்டதிலும் முறைகேடு நடந்துள்ளதாகவும், இவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே டெண்டரில் கலந்துகொள்ள அனுமதித்திருக்கிறார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசுக்கு கோவை வடக்கில் ரூ.17.27 கோடியும், கோவை தெற்கில் ரூ.13.58 கோடியும், நீலகிரி மாவட்டத்தில் ரூ.1.95 கோடியும் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாம். இந்த வருமான இழப்பு 2022 மற்றும் 2023-ம் ஆண்டில் மட்டும் கணக்கிடப்பட்டுள்ளதாக எப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் நிறுவனம், வாகனங்கள் பயன்பாட்டுக்காக ஆண்டுக்கு ரூ.100 கோடி செலவிட்டு வருகிறதாம். இதிலும் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் மொத்தமாக அரசுக்கு எவ்வளவு வருமான இழப்பு ஏற்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை. ஒவ்வொரு பிரிவு வாரியாக நடந்த, குறிப்பாக பார்களில் நடந்த முறைகேடு விவரங்கள், மதுபிரியர்களிடம் அதிகமாக நடத்திய வசூல் வேட்டை மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை டாஸ்மாக்கில் நடந்த முறைகேடுகள் மூலம் மொத்தமாக அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து முதல் தகவல் அறிக்கையில் இடம் பெறவில்லை அடுத்ததாக கூடுதலாக பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கையில், அரசுக்கு ஏற்பட்ட முழுமையான வருமான இழப்பு பற்றி தெரிவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+