சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இளையராஜா இசையும், பாசில் இயக்கமும்.. அதிகம் பேசப்படாத மேஜிக்.. பூவே பூச்சூடவா டூ காதலுக்கு மரியாதை!

Google Oneindia Tamil News

சென்னை: இசை ஞானி, இளையராஜாவுக்கு இன்று வயது 78. பெயருக்கு ஏற்ப, கேட்பவர்கள் மனதுக்குள் அமைதியை உருவாக்கி, ஞானத்தை ஊட்டக் கூடியது அவரது இசை.

ஆனால் சினிமாத் துறையில், அவர் பாரதிராஜாவுடனும், மகேந்திரனுடனும், பாலு மகேந்திராவுடனும் ராஜா சேர்ந்து பணி புரிந்து வெளியான படங்களை சிலாகித்தவர்களில், வெகு சிலரே, ஃபாசிலுடன் அவர் இணைந்து இசை ஆலாபனை செய்த படங்கள் பற்றி பேசியுள்ளனர்.

ஃபாசில் மற்றும் இசைஞானி இணைந்து பதித்த முத்திரைகள் ஏராளம். இதோ முகநூலில் சம்பத் குமார் என்பவர் தனது அனுபவத்தை எப்படி பதிவு செய்துள்ளார் என்று பாருங்கள்.

அப்பதான் சிரித்து பேசிகொண்டே வந்தார்.. திடீரென உடம்பை துளைத்த குண்டுகள்.. அமைச்சரின் மகள் பரிதாப பலிஅப்பதான் சிரித்து பேசிகொண்டே வந்தார்.. திடீரென உடம்பை துளைத்த குண்டுகள்.. அமைச்சரின் மகள் பரிதாப பலி

ஃபாசில் தமிழில் முதன் முதலில் இசைஞானியுடன் இணைந்தது 1985ல் வெளிவந்த பூவே பூச்சூடவா படம். பின் தொடர்ந்து பூவிழி வாசலிலே, என் பொம்முகுட்டி அம்மாவுக்கு, வருஷம் 16, அரங்கேற்ற வேளை, கற்பூரமுல்லை, கிளிப்பேச்சு கேட்கவா, காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, ஒரு நாள் ஒரு கனவு என அனைத்து படங்களிலும் இசைஞானியின் இசையில் "மட்டும்" தமிழ் படம் பணிபுரிந்த டைரக்டர் என்ற வரிசையில் தன்னை இணைத்து கொண்டவர்...

 பூஜைக்கேத்த பூவிது பாடல்

பூஜைக்கேத்த பூவிது பாடல்

ஒரு நாள் தன் படத்தை பற்றி பேச இசைஞானியை காண வந்தவர் அவரிடம் "தனக்கு தெரிந்த ஒரு கேரளாவை சேர்ந்த ஒரு பெண் நன்றாக பாடுவதாகவும் அவளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்க, அவரும் ஆமோதிக்க அந்த பெண் இசைஞானியை சந்தித்து ஒரு தியாகராஜ கீர்த்தனையை பாட அதில் கவரப்பட்டு அந்த பாடகிக்கு வாய்ப்பு வழங்கப்பட அந்த பெண் பாடிய பாடலே "பூஜைக்கேத்த பூவிது நேத்து தானே பூத்தது" பாடல்.

சின்னக் குயில் சித்ரா

சின்னக் குயில் சித்ரா

அந்த பாடகி பாசிலின் முதல் படமான பூவே பூச்சூடவாவில் "சின்னகுயில் பாடும் பாடல் கேட்குதா" என பாடி அனைத்து ரசிகர்களின் மனதிலும் சின்னக்குயில் சித்ராவாக பதிந்து போனார்... இசைஞானியின் இசையில் ஃபாஸிலின் இயக்கத்தில் வந்த ஒவ்வொரு படத்தின் இசையையும் சீன் பை சீன் அனுபவித்து ரசித்து எழுதினால் குறைந்தது 50 எபிசோட்டை தாண்டிடும்... அந்த அளவு அவருடைய திரைக்கதைக்கு உயிரோட்டத்தை கொடுத்திருப்பார் நம் இசைஞானி.

காம்பினேஷன்

காம்பினேஷன்

இசைஞானியின் இசைக்கு நல்ல தீனி கொடுப்பது போல காட்சி அமைப்புகளை தன் படத்தில் வைக்கும் இயக்குனர்களான மகேந்திரன் பாலுமகேந்திரா வரிசையில் ஃபாசிலுக்கும் ஒரு இடம் நிச்சயம் உண்டு என்பதற்கு அவர் படங்களே சாட்சி... வாழ்க்கையில் மிகவும் அதிகமாக பார்த்த ஒரே படம் வருஷம் 16. எனக்கு தெரிஞ்சி ஒரு 100 தடவைக்கு மேல பார்த்திருப்பேன்.. முதன் முதலில் காதல் உணர்வை தூண்டிய படம். படத்தின் டைட்டில் இசையில் தொடங்கி இறுதி காட்சி வரை சீன் பை சீன்.. அப்பப்பா... என்ன ஒரு பின்னணி இசை அமைப்பு. குறிப்பாக ராதிகாவை பார்க்க காசை சுண்டி போட்டு காமெடி இசையை துவக்கி ராதிகாவும் கண்ணனும் முதன் முதல் சந்திக்கும் அந்த காட்சிக்கு பின்னணி ஒரு இசையை கொடுத்துருப்பாரு பாருங்க... அதை அனுபவித்தவர்களுக்கு தான் அந்த உணர்வு புரியும்.

மலையாள படங்கள்

மலையாள படங்கள்

பாடல்கள் அனைத்தும் ஒவ்வொரு ரசத்தில் கொடுத்ததோட அல்லாம தாத்தத தரிகிடன்னு கர்னாடக சங்கீதம் போல ஆரம்பிச்சு, குத்தாட்டம் குலவை நாட்டுபுறம் ரொமாண்சுன்னு 4 நிமிச ஏய் அய்யாசாமி பாடலில் 7 கோடி நரம்பை தெரிக்க வெச்சிருப்பாரு... தமிழில் அனைத்து படங்களும் இசைஞானியுடன் இணைந்து பணி புரிந்திருந்தாலும் மலையாளத்தில் ஃபாஸில் இயக்கிய படங்களில் எண்ட சூரியபுத்திருக்கு (1991) மற்றும் பப்பயுட சொந்தம் அப்பூஸ் (1992) ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே.. இந்த இரண்டு படத்தில் வரும் அனைத்து பாடல்களும் அருமையாக இருந்தாலும் ஓலத்தும்பத்தினுல், ஸ்னேகத்தின் பூஞ்சோலை, ஆலாபனம் தேடும் தாய்மனம் போன்ற பாடல்கள் செவியில் தேனாய் இனிப்பவை. 2010ல் வெளிவந்த கிளிமொழி கிண்ணாரம் படம் தமிழில் 1993ல் வெளிவந்த கிளிப்பேச்சு கேட்கவா படத்தின் டப்பிங் என்பதால் அதை கணக்கில் எடுக்கவில்லை...

 தலைமுறையை தாண்டிய மைல் கல்கள்

தலைமுறையை தாண்டிய மைல் கல்கள்

அடுத்து சிறு உதாரணமாக சொன்னால் பூவிழி வாசலிலே படத்தில் குழந்தையின் அம்மாவை கொலை செய்யும் காட்சி, வில்லன் மற்றும் மாற்று திறனாளி காட்சி, ரகுவரனை நிழல்கள் ரவி சந்திக்கும் காட்சி, சத்யராஜ் குழந்தைக்கு டீச் செய்யும் காட்சி கிளைமாக்ஸ் என படத்துடன் இணைந்து நம்மள பந்தாட்டம் ஆட வெச்சிருப்பாரு.. காதலுக்கு மரியாதையை அந்த படத்திற்க்கு கொடுத்த இசை மரியாதையாகவே செய்திருப்பார் இசைஞானி... அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியுடன் இசைஞானியின் பின்னணி உயிரோட்டத்துக்கு உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் சிந்தாதவர்களே இல்லை என்று சொல்லலாம். இவர்கள் இணைந்து கொடுத்த இந்த படங்கள் அனைத்தும் தமிழ் திரைப்பட வரலாற்றில் தலைமுறைகளை தாண்டி ஒரு மைல்கற்களாக என்றும் என்றென்றும் ஜொலித்து கொண்டு இருக்கும் என்பதே நிதர்சண உண்மை...

English summary
Musician Isai gnani Ilayaraja is celebrating his 78th birth day today. As the name suggests, his music can create peace in the minds of the listeners and nurture wisdom. But in the field of cinema, very few have talked about the films in which he has worked with Fazil. Fazil and the musician have a lot of imprinted stamps. Here is how Sampath Kumar recorded his experience on Facebook.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X