ஒன்னுமில்ல..உங்க மொபைல குடுங்க.. ஆரோவில்லில் பதுங்கிய கிஷோர் கே சாமி! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்
சென்னை : பாஜக ஆதரவாளரும் சமூக ஊடக பதிவாளருமான கிஷோர் கே சாமி முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சித்து பதிவிட்ட வழக்கு தொடர்பாக புதுச்சேரியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தது எப்படி? எவ்வாறு கைது செய்யப்பட்டார்? என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கிறது.
பாஜக ஆதரவாளரும் பல்வேறு தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்டு புகழ்பெற்றவருமான கிஷோர் கே சாமி தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவாகவும் திமுகவுக்கு எதிராகவும் பேசி வருகிறார். தனது பேஸ்புக் மற்றும் ட்விட்டர் கணக்குகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் குறித்து அருவருக்கத்தக்க வகையில் கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தியதை விமர்சிக்கும் வகையில் அவர் கருத்து பதிவிட்டு இருந்தார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தது.

கிஷோர் கே சாமி
நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைக்காக நோட்டீஸ் அனுப்பினர். நவம்பர் 5, 7, 9 மற்றும் 14ஆம் தேதிகளில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கிஷோர் கே சாமிக்கு பலமுறை நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டது. ஆனால் விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில் முன் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கிஷோர் கே சாமி மனு தாக்கல் செய்திருந்தார்.

ஜாமீன் தள்ளுபடி
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் ஆஜராகாதவருக்கு முன் ஜாமீன் வழங்கினால் அது சமூகத்திற்கு தவறான தகவலை தெரிவிப்பது போல் ஆகிவிடும் என அந்த மனுவை தள்ளுபடி செய்தார். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு கிஷோர் கே சாமி முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகினது. இந்த நிலையில் அவர் புதுச்சேரி ஆரோவில்லில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

புதுச்சேரியில் கைது
அவரது மொபைல் போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்த நிலையில் அவரது நண்பர் ஒருவர் மூலம் வழக்கறிஞர்கள் மற்றும் வேறு சிலருடன் அவர் பேசி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த எண் அடிக்கடி ஆன் செய்யப்பட்டது. இதை அடுத்து சனி ஞாயிறு நீதிமன்றம் விடுமுறை என்பதால் இன்று முன்ஜாமின் பெற கிஷோர் கே சாமி முயற்சித்து வந்துள்ளார். இந்த நிலையில் புதுச்சேரியில் அவர் தங்கி இருக்கும் இடத்தை கண்டுபிடித்த போலீசார் நள்ளிரவில் அந்த இடத்தை சுற்றி கண்காணித்து வந்துள்ளனர்.

ரகசியமாக கண்காணிப்பு
அவர் வேறு எங்கும் செல்கிறாரா? யாரேனும் சந்திக்க வருகிறார்களா? என்பது குறித்து கண்காணித்து வந்த நிலையில் நள்ளிரவில் அதிரடியாக அவரது அறைக்குள் சென்று அவரை கைது செய்வதாக கூறி இருக்கின்றனர். அப்போது அவருடன் அவரது நண்பர் ஒருவரும் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. முதலமைச்சர் குறித்து பதிவிட்ட வழக்கு தொடர்பாக அவரை கைது செய்வதாகவும் உங்களது செல்போனை கொடுங்கள் என கேட்டு வாங்கி அதனை ஸ்விட்ச் ஆப் செய்துள்ளனர்.

சிறையில் அடைப்பு
தொடர்ந்து புதுச்சேரியில் இருந்து பாதுகாப்புடன் சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட இருக்கிறார். தற்போது முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட பணிகளில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். கிஷோர் கே சாமி சமூக வலைதளங்களில் தவறாக கருத்து பதிவிட்டு கைதாவது இது முதல் முறை அல்ல.

மீண்டும் கைது
கடந்த ஜூன் மாதம் பெரியார், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திராவிட அரசியல் தலைவர்கள் குறித்தும், பத்திரிகையாளர்கள் குறித்தும் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக அப்போது கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட அவர் பல நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். இன்னிலையில் அதே குற்றத்திற்காக மீண்டும் கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications