கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பாஸ்போர்ட் விவரங்களை இணைப்பது எப்படி - சுகாதாரத்துறை விளக்கம்
வெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்கு இந்த இணைப்பு அவசியமாகும் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பாஸ்போர்ட் விவரங்களை இணைக்க வேண்டும்
சென்னை: கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பாஸ்போர்ட் விவரங்களை இணைக்க வேண்டும்.வெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்கு இந்த இணைப்பு அவசியமாகும். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், அதற்கான சான்றிதழில் தங்களது பாஸ்போர்ட் குறித்த விவரங்களை இணைப்பது எப்படி என்பது குறித்த விவரங்களை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்கள் செலுத்திக்கொண்டவர்கள் மட்டுமே தற்போது வெளிநாடு சென்று வேலை செய்ய முடியும், உயர்கல்வி படிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தடுப்பூசி சான்றிதழில் பாஸ்போர்ட் விபரங்களை இணைக்க வேண்டியது அவசியமாகும்.
பாஸ்போர்ட் விபரங்களை இணைப்பது எப்படி என்று சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அறிவிப்பில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் https://selfregistration.cowin.gov.in/ என்ற கோவின் செயலிக்குள் லாக் இன் செய்து செல்ல வேண்டும்.

ஓடிபி நம்பர்
தடுப்பூசி செலுத்திய போது அளித்த செல்போன் எண்ணை சரியாக பதிவிட வேண்டும். தொலைபேசி எண்ணுக்கு வரும், ஒரு முறை பயன்படுத்தப்படும் ஓ.டி.பி எண்ணை பதிவிட வேண்டும்.

பாஸ்போர்ட் விபரங்கள்
உள்ளே நுழைந்த பிறகு வலது பக்கம் உள்ள Raise an issue என்ற தெரிவை அழுத்தவும். அதில் Add passport details என்பதை தேர்வு செய்யவும். யாருக்கு பாஸ்போர்ட் விவரங்களை இணைக்க வேண்டுமோ அவரது பெயரை தேர்வு செய்யவும். அதைத் தொடர்ந்து பாஸ்போர்ட் விவரங்களை சரியாக பதிவிட வேண்டும்.

விபரங்கள் சரியானவையா
அந்த விவரங்கள் சரியானவை என்று சுய ஒப்பம் அளித்த பிறகு அதனை சமர்ப்பிக்க வேண்டும். உங்களது விவரங்கள் பதிவேற்றப்பட்டு வருகிறது என்ற ஒப்புதல் செய்தி திரையில் தோன்றும். அதன் பின்னர், முகப்பு பக்கத்துக்குச் செல்லவும். வேண்டுகோளின் நிலையை அறிவதற்கான வசதியை தேர்வு செய்யவும். உங்களது விவரங்கள் வெற்றிகரமாக பதிவேற்றப்பட்டது என்ற வாசகங்கள் திரையில் தோன்றும்.

வெளிநாடு செல்ல அவசியம்
மீண்டும் முகப்பு பக்கத்துக்கு வந்து பாஸ்போர்ட் விவரம் இணைக்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். வெளிநாடுகளுக்குச் செல்வோருக்கு இது அத்தியாவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications