தினம் ‛Late Night'-ல் மீட்டிங்.. அமெரிக்க கிளைன்ட்டால் புலம்பிய ஐடி ஊழியர்.. சீனியர்கள் தந்த அட்வைஸ்
சென்னை: தினமும் லேட் நைட் நேரத்தில் இரவு 11 மணிக்கு அமெரிக்காவில் இருக்கும் மேனேஜர் போன்கால் மீட்டிங் வைப்பதால் ஐடி ஊழியர்கள் அதிருப்தியடைந்தார். இதனை எப்படி சமாளிப்பது என்று அவர் மனஉளைச்சலில் தவித்தார். இதுதொடர்பாக அவர் ‛ரெடிட்' தளத்தில் பதிவிட்டு அட்வைஸ் கேட்ட நிலையில் சீனியர் ஐடி ஊழியர்கள் அவருக்கு கொடுத்த அறிவுரைகள் கவனம் பெற்றுள்ளது.
நம் ஐடி துறையில் பணியாற்றும் பல ஊழியர்களுக்கு ‛லேட்-நைட் போன்கால் மீட்டிங்' என்பது இருக்கும். இதற்கு முக்கிய காரணம் அவர்களின் கிளைண்ட் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருப்பது தான்.

இதனால் நம் நாட்டில் உள்ள ஐடி ஊழியர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் இரவு பணியே வேண்டாம் என்று பலரும் புராஜெக்ட் மாறுவது, நிறுவனங்கள் மாறுவதையும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் ‛ரெடிட்' வலைதள பக்கத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் தனது மனவருத்தத்தை பதிவு செய்துள்ளார். அதில், ‛‛எனக்கு சமீபத்தில் புதிய புராஜெக்ட் ஒதுக்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள எனது மேனேஜர் தினமும் கிளைன்ட் போன்கால் மீட்டிங்கை நள்ளிரவு வைக்கிறார் முதல் 2 நாட்கள் இந்த போன்கால் இரவு 9 மணிக்கு இருந்தது. அதன்பிறகு இரவு 10 மணிக்கு மாற்றப்பட்டது.இப்போது தினமும் இரவு 11 மணிக்கு மீட்டிங் வைக்கிறார்கள்.
நான் இந்த பணியில் அதிக அனுபவம் கொண்டவர் இல்லை. ஓராண்டுக்கு முன்பு தான் பிரஷராக பணிக்கு சேர்ந்தேன். என்னால் இந்த சூழலை எப்படி கையாள்வது என்பது தெரியவில்லை. நேர வித்தியாசம் (Time Zone) பற்றி எனக்கு தெரியும். ஆனாலும் தினமும் நள்ளிரவில் இப்படியான போன்கால் மீட்டிங்கை என்னால் ஏற்க முடியவில்லை.
அமெரிக்கா கிளைன்ட்டுக்காக பணியாற்றும்போது இப்படியான விஷயங்கள் பொதுவானதா? நீங்கள் எல்லாம் இந்த விஷயத்தை எப்படி சமாளிக்கிறீர்கள்? இதுதொடர்பாக நான் எனது மேனேஜரிடம் பேச வேண்டுமா? அப்படி பேசினால் அலுவலக பணியில் ஓராண்டு மட்டுமே அனுபவம் கொண்ட எனக்கு பிரச்சனைகள் வருமா? இதற்கு அட்வைஸ் தாருங்கள்'' என்று கூறியுள்ளார்.
இந்த பதிவை பார்த்த பலரும் அவருக்கு அட்வைஸ் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஒருவர், ‛‛உங்களின் மேனேஜரிடம் பேசுங்கள். அவரை கிளைன்ட்டிடம் பேச சொல்லுங்கள். பெரும்பாலான கிளைன்ட்ஸ் நேரத்தை அட்ஜட்ஸ்ட் செய்வார்கள். அதேவேளையில் C-நிலை நிர்வாகியுடன் அவ்வப்போது வரும் அழைப்பாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் வழக்கமான இத்தகைய கால் நியாயமானது அல்ல'' என்று கூறியுள்ளார்.
இன்னொரு தரப்போ, ‛‛நாம் பணி தான் செய்கிறோம். யாருக்கும் அடிமை இல்லை. இதனால் தொழில் தர்மம் சார்ந்து பணி செய்யுங்கள். லேட் நைட் கால் பற்றி மேனேஜரிடம் கூறுங்கள். அவர் மாற்றி தருகிறாரா என பாருங்கள். இல்லாவிட்டால் அதற்கேற்ப பணி நேரத்தை மாற்றி கேளுங்கள்'' என்று கூறியுள்ளது.
மற்றொருவரோ , ‛‛நான் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்காவில் உள்ள டீமுடன் பணியாற்றி வருகிறேன். இதனால் தினமும் எனது வேலையை வித்தியாசமாக திட்டமிட வேண்டி உள்ளது. உங்களுக்கு நான் சொல்வது ஒன்று தான். சரியாக பிரேக் எடுத்து கொள்ளுங்கள். மொத்தமாக 8-10 மணிநேரங்களுக்கு மேல் பணி செய்யாமல் இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்'' என்று கூறியுள்ளார்.
இன்னொருவர், ‛‛இந்தியாவின் ஐடி துறையில் நடக்கும் சர்க்கஸ்க்கு வருக. கிளைன்ட் அமெரிக்காவில் இருந்தால் லேட்-நைட் கால் என்பது பொதுவானவை. ஆனால் அதனை 7 மணிக்கு மாற்றலாம். மேனேஜர்கள் இதனை செய்வது இல்லை'' என்று நம் நாட்டின் ஐடி ஊழியர்கள் இடையே நிலவும் அதிருப்தியை வெளிக்காட்டியிருந்தார். அதேபோல் இன்னும் பலர் லேட்-நைட் கால், மீட்டிங்கால் தாங்கள் அனுபவிக்கும் சிரமங்களை பகிர்ந்து வருகின்றன. தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications