Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 சாதிகளுக்கு மட்டும் பதவி.. அப்ப நாங்க? - ஈபிஎஸ் அணிக்குள் சலசலப்பு.. உடனே ஆஃப் செய்த எடப்பாடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஒருகாலத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த வரகூர் அருணாசலத்திற்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த முன்னாள் அமைச்சர் வரகூர் அருணாசலம் 2016ல் ஜெயலலிதாவால் பதவி நீக்கம் செய்யப்பட்டவர்.

வரகூர் அருணாசலம் முக்கிய பதவியில் நியமிக்கப்பட்டதற்கு பின்னணியில், கட்சிக்குள் எழுந்த சலசலப்புகள் காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஜெயலலிதாவின் நம்பிக்கை

ஜெயலலிதாவின் நம்பிக்கை

ஓ.பன்னீர்செல்வம் மீது மலையளவு நம்பிக்கை வைத்திருந்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ஜெயலலிதா ஊழல் வழக்கால் சிறைக்குச் செல்ல நேர்ந்த போதெல்லாம், அவரது அரியணைக்கு அமர்த்தப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். ஆனால், சில நேரங்களில் ஓபிஎஸ் மீதான அதிருப்தியால் அவரது ஆதரவாளர்களை அதிரடியாக நீக்கி தனது கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

2016ல்

2016ல்

அந்தவகையில், கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்களாக இருந்த 5 பேரின் பதவிகளையும் அதிரடியாக பறித்தார் ஜெயலலிதா. அவர்கள் முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாசலம், வேளச்சேரி பகுதி செயலர் எம்.கே.அசோக் உள்பட ஐந்து பேர். அவர்களில் சிலர் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு ஓ.பிஸ் வீட்டிற்கு சென்றதாக அப்போது சலசலப்பு ஏற்பட்டது.

 வரகூர் அருணாசலம்

வரகூர் அருணாசலம்

அனைத்துலக எம்ஜிஆர் மன்ற பொருளாளர் பதவியில் இருந்து முன்னாள் துணை சபாநாயகரும் முன்னாள் அமைச்சருமான வரகூர் அருணாசலம் நீக்கப்பட்டதற்கு, சசிகலாவின் கணவர் நடராஜனை அவர் சந்தித்து பேசியதே காரணம் என்று கூறப்பட்டது. பின்னர், மீண்டும் வரகூர் அருணாசலத்திற்கு, அவர் முன்னர் வகித்து வந்த அனைத்துலக எம்ஜிஆர் மன்ற பொருளாளர் பதவி வழங்கப்பட்டது. ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த வரகூர் அருணாசலம் சமீபகாலமாக எடப்பாடி அணியில் இருந்து வருகிறார்.

அமைப்புச் செயலாளர்

அமைப்புச் செயலாளர்

இந்நிலையில், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற பொருளாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, அதிமுக அமைப்புச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியால் நியமிக்கப்பட்டுள்ளார் வரகூர் அருணாசலம். முன்னர் தீவிர ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த அருணாசலம் இப்போது எடப்பாடி பழனிசாமி பக்கம் இருக்கிறார். அவருக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டதன் பின்னணியில் சில காரணங்கள் இருப்பதாக ர.ரக்கள் முணுமுணுக்கின்றனர்.

சாதி கோட்டா

சாதி கோட்டா

அதிமுகவில் புதிய நிர்வாகிகளை நியமிப்பதில் சாதி ரீதியாக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. தன் மீதான குற்றச்சாட்டை களையும் விதமாக அவர் சார்ந்த கவுண்டர் சமூகம் மட்டுமல்லாது முக்குலத்தோர், வன்னியர் உள்ளிட்ட சமூக பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஓபிஎஸ் சார்ந்த சமூகத்தினரான ஆர்.பி.உதயகுமார் எதிர்க்கட்சி துணைத் தலைவராகவும், திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராகவும், நத்தம் விஸ்வநாதன் துணை பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 தலித் பிரதிநிதித்துவம்

தலித் பிரதிநிதித்துவம்

அதேநேரம், தலித் சமுதாயத்தினருக்கு பிரதிநிதித்துவம் தரப்படவில்லை என கட்சிக்குள் சலசலப்புகள் எழுந்தன. முன்னாள் அமைச்சர் வரகூர் அருணாசலம் உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர், மூத்த நிர்வாகிகளிடமே தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த விஷயம் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி காதுக்கும் சென்றுள்ளது.

முக்கிய பதவி

முக்கிய பதவி

உடனே, தலித் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமினுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோமே என ஈபிஎஸ் தரப்பு பேச்சுகளைக் கிளப்பி விட்டுள்ளது. எனினும் தலித் பிரிவைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் சமாதானம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்தே, வரகூர் அருணாசலம் அதிமுகவின் அமைப்புச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+