Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி சிஎன்என் - நியூஸ் 18 செய்தி நிறுவனம் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது. இதில் நூலிழையில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. அதோடு தமிழகத்தில் எந்தெந்த வயதினர் ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய்க்கு ஆதரவாக உள்ளனர்? என்பது பற்றிய விவரம் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி சிஎன்என் - நியூஸ் 18 செய்தி நிறுவனம் சார்பில் VoteVibe நிறுவனம் VoteTracker எனும் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பை மேற்கொண்டது.

mk stalin edppadi palaniswami vijay tamil nadu assembly election 2026

இந்த கருத்து கணிப்பில் திமுக கூட்டணி - அதிமுக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுவதாகவும், நூலிழையில் திமுக கூட்டணி முன்னிலை வகிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூலிழையில் திமுக முன்னிலை

தமிழகத்தில் மொத்தம் 234 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 118 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் தான் தற்போதைய கருத்து கணிப்பில் திமுக தலைமையிலான கூட்டணி 113 முதல் 123 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் அதிமுக தலைமையிலான பாஜகவின் கூட்டணி 106 முதல் 116 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்றும், புதிய வரவான விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 2 முதல் 8 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் வரும் சட்டசபை தேர்தல் திமுக கூட்டணி - அதிமுக கூட்டணி இடையே கடும் போட்டியாக அமையலாம் என்று கருத்து கணிப்பு கூறியுள்ளது.

ஸ்டாலின் ஆட்சி எப்படி இருக்கு?

மேலும் இந்த கருத்து கணிப்பில் சில முக்கிய விஷயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசின் செயல்பாடு குறித்து மக்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு கருத்து கணிப்பில் பங்கேற்றவர்களில் சுமார் 40 சதவீதம் பேர் நன்றாக உள்ளது. மிகவும் நன்றாக உள்ளது என்று கூறியுள்ளனர்.

அதே சமயம் 39 சதவீதம் பேர் மோசம், மிக மோசம் என்று கூறியுள்ளனர். இது தேர்தல் களத்தில் திமுகவுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பை ஏறக்குறைய சமமாக காட்டுகிறது. அதேவேளையில் பெண் வாக்காளர்கள் திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளனர். ஆனால் ஆண்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

வயது வாரியாக யார் யாருக்கு ஆதரவு?

வயது வாரியான வாக்காளர்கள் அடிப்படையில் வயதானவர்கள் ஸ்டாலின் பக்கம் உள்ளனர். அதன்படி 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவாக உள்ளனர். ஆனால் 18 -24 வயதுக்கு உட்பட்ட வேட்பாளர்கள் அரசுக்கு எதிராக இருப்பதோடு, விஜய்க்கு ஆதரவாக உள்ளனர். அதேவேளையில் நடுத்தர மற்றும் வயது வாக்காளர்கள் பழனிச்சாமிக்கு ஆதரவாக உள்ளனர்.

திமுகவுக்கு வார்னிங்

இதன்மூலம் திமுக சுதாரிக்க வேண்டும். பொதுவாக ஒரு அரசியல் கட்சிக்கு அனைவரின் ஆதரவும் தேவை என்றாலும் கூட இளைஞர்களின் ஆதரவு மிகவும் முக்கியம். இவர்களின் ஆதரவு இருந்தால் தான் நீண்டகாலம் சிறப்பாக பயணிக்க முடியும். அந்த வகையில் திமுக பின்தங்கி உள்ளதாக இந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. இது திமுகவுக்கான வார்னிங்காக பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+