அதிமுகவை விட அதிக வாக்குகள் பெறும் பாஜக.. ஆனால் கணக்கு இடிக்குதே! கருத்து கணிப்பில் நோட் பண்ணீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் உண்மையில் வாக்கு வங்கி ரீதியாக பாஜக அதிமுகவை முந்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக வெளியாகி உள்ள கருத்து கணிப்புகள் முக்கியமான சந்தேகம் ஒன்றை எழுப்பி உள்ளது.

லோக்சபா தேர்தல் தொடர்பாக வரிசையாக சர்வேக்கள் வெளியாகி வருகின்றன. இந்த சர்வேக்கள் பல்வேறு அதிர்ச்சி தரும் சுவாரசியமான விஷயங்களை வெளியிட்டு வருகின்றன. நேற்று மொத்தமாக இரண்டு சர்வேக்கள் வெளியாகின. ஒன்று இந்தியா டுடேவின் மூட் ஆப் தி நேஷன் சர்வே. இன்னொன்று டைம்ஸ் நவ் - மேட்ரைஸ் என்சி இது தொடர்பாக கருத்து கணிப்புகளை மேற்கொண்டு உள்ளன.

How will BJP over take AIADMK to be in second place in Tamil Nadu Lok Sabha 2024 elections?

இந்தியா டுடே சர்வே; இந்தியா டுடேவின் மூட் ஆப் தி நேஷன் சர்வேவில், தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 39 இடங்களிலும் வெல்லும். கடந்த முறை 38 இடங்களில் வென்றது. இந்த முறை.. ரவீந்திரநாத் எம்பி வென்ற இடத்தையும் சேர்த்து 39 இடங்களிலும் திமுகவே வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் வாக்கு வங்கி 47 சதவிகிதம் ஆக இருக்கும். பாஜக ஒரு இடத்தில் கூட வெல்லாது. ஆனால் வாக்கு வங்கி 15 சதவிகிதம் ஆக உயரும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இதில் அதிமுக வாக்கு வங்கி கூறப்படவில்லை. மாறாக "others" என்று கூறி.. மொத்தமாக மற்ற கட்சிகளின் வாக்கு வங்கி 38 சதவிகிதம் என்று கூறப்பட்டு உள்ளது.

கணிப்பு; இன்னொரு பக்கம் டைம்ஸ் நவ் வெளியிட்ட கணிப்பில் , திமுக கூட்டணி லோக்சபா தேர்தலில் 59.7 சதவிகிதம் வாக்குகளை பெறும் என்று கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதேபோல் பாஜக 20.6 சதவிகிதம் வாக்குகளை பெறும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அதிமுக 16 சதவிகித கருத்து கணிப்புகளை பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

அதாவது இந்த முறை பாஜக அதிமுகவை விட அதிக வாக்குகள் பெறும். முதல்முறையாக பாஜகவின் வாக்கு வங்கி அதிமுகவை முந்தும். தமிழ்நாட்டில் பாஜக இரண்டாம் இடத்தை பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

பொதுவாக அதிமுக ஜெயலலிதா மறைவிற்கு பின் ஒரு தேர்தலில் கூட வெற்றிபெறவில்லை. ஆனாலும் வாக்கு சதவிகிதம் 30-40 என்ற அளவில் எடுக்கும். கடந்த சட்டசபை தேர்தலில் கூட 39.72 சதவிகிதம் வாக்குகளை அதிமுக வென்றது. திமுக 45.38% வாக்குகளை வென்றது. அதேபோல் 2019 லோக்சபா தேர்தலில் 30.56% சதவிகிதம் வாக்குகளை அதிமுக வென்றது. திமுக 53.15% வாக்குகளை வென்றது.

ஆனால் இப்போது 2021ல் திமுக கூட்டணி லோக்சபா தேர்தலில் 59.7 சதவிகிதம் வாக்குகளை பெறும் என்று கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதேபோல் பாஜக 20.6 சதவிகிதம் வாக்குகளை பெறும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அதிமுக 16 சதவிகித கருத்து கணிப்புகளை பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு (மொத்த இடங்கள்- 39): லோக்சபா தொகுதி கணிப்புகள் இதோ:

- பாஜக: 1
- திமுகவின் இந்தியா கூட்டணி - 36
- அதிமுக: 2
- மற்றவை: 0

சந்தேகம்; இதுதான் கேள்விகளை எழுப்பி உள்ளது. தமிழ்நாட்டில் பாஜகவிற்கு தனியாக 10 சதவிகிதம் வாக்கு வங்கி கூட இல்லை. அப்படி இருக்க பாஜக எப்படி 15 சதவிகிதம் வாக்கு வங்கியை பெற முடியும். அதிலும் இரண்டாவது கணிப்பில் பாஜக 20.6 சதவிகிதம் வாக்குகளை பெறும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.

How will BJP over take AIADMK to be in second place in Tamil Nadu Lok Sabha 2024 elections?

இது எப்படி சாத்தியம். அதோடு என்டிஏ என்று இதை கூறி உள்ளனர். இந்த கருத்து கணிப்பை எடுக்கும் போது தமிழ்நாட்டில் எது என்டிஏ என்று வைத்து கணிப்பை எடுத்தனர். ஏனென்றால் என்டிஏவில் அதிமுக இல்லை. பாமக, தேமுதிக , அமமுக, ஓபிஎஸ் ஆகியோரும் இதுவரை அதிகாரபூர்வமாக என்டிஏவில் சேரவில்லை.

இன்னும் சொல்லப்போனால்.. பாமக, தேமுதிக, சமக, புதிய பாரதம் எல்லாருமே அதிமுகவுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். என்டிஏ என்றால் தமிழ்நாட்டில் இப்போதைக்கு பாஜக, பெரும்பாலும் + ஐஜேகே. அப்படி இருக்க.. எந்த என்டிஏ கூட்டணிக்கு இவ்வளவு வாக்கு வங்கி உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.

கூட்டணியே உருவாகாத நிலையில் எந்த கூட்டணியை முன்னிறுத்தி இந்த கணிப்பில் அதிமுகவை விட அதிக சதவிகிதம் வாக்குகள் வரும் என்று முடிவு எடுக்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+