நடிகை தேவயானியின் கோலங்கள் சீரியலுக்கு நான் ரசிகன்! மனம் திறந்து பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன்!
சென்னை: நடிகை தேவயானி நடிப்பில் ஒளிப்பரப்பாகிய கோலங்கள் சீரியலுக்கு தாம் மிகப்பெரிய ரசிகன் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசியிருக்கிறார்.
கோலங்கள் நெடுந்தொடரை 1,000 எபிசோடுகளையாவது தாம் பார்த்திருப்பேன் என்றும் அந்தளவுக்கு கதைக்களம் கொண்ட ஒரு சீரியல் அது எனவும் புகழாரம் சூட்டியிருக்கிறார்.
கோலப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பதற்காக நடிகை தேவயானியை அழைத்து வந்து கவுரவித்துள்ளார் அமைச்சர் மா.சுப்ரமணியன்.

கோலப்போட்டி
சென்னை சைதாப்பேட்டையில் நடத்தப்பட்ட கோலப்போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்றிரவு நடைபெற்றது. இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக நடிகை தேவயானியை அழைத்து வந்து கோலப் போட்டியில் வென்ற பெண்களுக்கு பரிசுகளை வழங்க வைத்தார் அமைச்சர் மா.சுப்ரமணியன். அப்போது பேசிய அவர், நடிகை தேவையானிக்கு புகழாரம் சூட்டும் வகையில் அவர் குறித்த பல்வேறு சிறப்புகளை எடுத்துக் கூறினார்.

நடிகை தேவயானி
நடிகை தேவயானியை பொறுத்தவரை தனது மகளை பள்ளியில் சேர்த்ததோடு அதே பள்ளியில் ஊதியம் இல்லாமல் மகளுக்காக பயிற்றுநராக பணியாற்றிய பெருமைக்கு சொந்தக்காரர் எனக் குறிப்பிட்டார். மேலும், நடிகை தேவயானி எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் கூட அதில் கிடைக்காத புகழும், பெயரும் கோலங்கள் சீரியலில் நடித்ததன் மூலம் கிடைத்திருப்பதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார். 1,000 எபிசோடுகளை கடந்து பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகிய கோலங்கள் நாடகத்தை தாம் நாள் தவறாமல் பார்ப்பேன் எனக் கூறினார்.

அமைச்சர் மா.சுப்ரமணியன்
தொலைக்காட்சியில் சீரியல் பார்த்ததால் தன்னை சும்மா இருந்ததாக யாரும் நினைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் கோலங்கள் நெடுந்தொடர் இரவில் டெலிகாஸ்ட் ஆனதால் அதை பார்க்க தனக்கு பெரிய சிரமம் ஏதும் இல்லை எனவும் கூறினார். மேலும், எல்லாவற்றுக்கும் மேலாக கோலங்கள் சீரியலுக்கு தாம் மிகப்பெரிய ரசிகன் எனக் கூறி கைதட்டல்களை அள்ளினார். கோலப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிக்க கோலங்கள் நாயகி தான் சரியாக இருப்பார் என்பதால் அவரை அழைத்து வந்ததாக தெரிவித்தார்.

அரசியல் நிகழ்ச்சி
நடிகை தேவயானியை பொறுத்தவரை அரசியல் மேடை ஒன்றில் கலந்துகொள்வது இதுவே முதல்முறையாகும். எந்தக் கட்சி நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாத தேவயானி, அமைச்சர் மா.சுப்ரமணியன் மீது வைத்திருக்கும் மரியாதை காரணமாக இந்த பரிசளிப்பு விழாவில் பங்கேற்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications